விஜயை அப்பட்டமாக காப்பியடித்த சிவகார்த்திகேயன்.! வெளியானது பிரின்ஸ் பட போஸ்டர்…

sivakaarthikeyan
sivakaarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் சிவகர்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு முடிந்தவுடன் கேக் வெட்டி பட குழுவினர் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. சிவகர்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது.

மேலும் பிரின்ஸ் திரைப்படத்தின் டிரைலரை தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வைரளாகி வருகிறது. அதில் நடிகர் விஜய் அவர்கள் மாஸ்டரில் நடித்த கெட்டப்பில் சிவகார்த்திகேயன் ஸ்கூல் டீச்சராக போஸ் கொடுத்து இருக்கிறார்.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் அவர்கள் கல்லூரியில் ஆசிரியராக வேலை செய்தார். பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி ஆசிரியராக வெளிசெயகிறார் போல. மேலும் இந்த போஸ் வெளியானதை பார்த்த நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்,டீசர் சமிபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து உள்ள பிரின்ஸ் திரைப்படம் திபவளியன்று திரைக்கு வருவதாக் படக்குழு தெரிவித்து உள்ளது.

இதோ பிரின்ஸ் படத்தின் மாஸ் போஸ்டர்.