நடிகர் சிவகார்த்திகேயன் படங்கள் பெரும்பாலும் காமெடி கலந்த படமாக அமைவதால் அதை மக்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் என்ஜாய் செய்து பார்த்து வருகின்றனர். இதனால் அவருக்கு வெகுவிரைவிலேயே அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் போன்ற இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து. அஜித் விஜய் போன்ற டாப் நடிகர்களுக்கு நிகராக இடம் பிடித்துள்ளார் மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது. சமீபத்தில் இந்த படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் பல பிரபலங்களின் பிறந்தநாள் மற்றும் படங்கள் என அவருக்கு பிடித்து போய் விட்டால் தயங்காமல் வாழ்த்து கூறுவது வழக்கம். அந்த வகையில் இன்று தளபதி விஜயின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது விஜய் நடித்து வரும் தனது 61வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பிறந்தநாள் ட்ரீட் ஆக நேற்று வெளியாகியதை அடுத்து இன்று தளபதி விஜய்க்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர் அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் பீஸ்ட் பட ஷூட்டிங் போது விஜய் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் மற்றும் வாரிசு படத்திற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Wishing you a very happy birthday @actorvijay sir ❤️❤️ Best wishes for #Varisu 👍😊 #HBDThalapathyVijay pic.twitter.com/M31q5hn4PI
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 22, 2022