தனுஷை விடாமல் துரத்தும் சிவகார்த்திகேயன்..! இரண்டு படங்களையும் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிய OTT நிறுவனம்.

dhanush ana sivakathikeyan
dhanush ana sivakathikeyan

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருவர் நடிகர் தனுஷ் இவர் அண்மை காலமாக வெற்றி படங்களை கொடுத்து ஓடுகிறார் அந்த வரிசையில் நடிகர் தனுஷ் கடைசியாக திருச்சிற்றம்பலம்  படம் வெளிவந்து  பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. அதை தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன்..

இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தனுஷ் அண்ணன் செல்வராக இயக்கி, நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, இந்துஜா ரவிச்சந்திரன்  மற்றும் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் கையில் வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது கேப்டன் மில்லர் திரைப்படம் தான் ஏனென்றால் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் மேலும் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்குவதாக பல தகவல்கள் வெளி வருகின்றன.

இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், சந்திப் கிஷன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு தற்பொழுது ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல OTT நிறுவனமான அமேசான் பிரைம்  ரூபாய் 38 கோடிக்கு வாங்கியுள்ளதாம்..

அதே போல சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தையும் அமேசான் பிரைம் நிறுவனம் 34 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இரண்டு டாப் ஹீரோ படங்களையும் தற்போது அமேசான் நிறுவனம் தட்டி தூக்கி உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.