வெடி வெடித்து தீபாவளியை கொண்டாடிய சிவகார்த்திகேயன் – வைரல் வீடியோ இதோ..

sivakarthikeyan
sivakarthikeyan

டாக்டர், டான் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் பிரின்ஸ்.. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார் படம் கடந்த 21 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து  உக்ரைன் நாட்டு நடிகை மரியா..

பிரேம்ஜி கங்கை அமரன், சூரி, சத்யராஜ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி, ரொமான்ஸ், காதல் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போனது ஆனால் படம் ஒட்டுமொத்தமாக கலவையான விமர்சனத்தை பெற்று முதல் நாளிலிருந்து ஓடுகிறது.

அதனால் இந்த படத்தின் வசூல் சுமாராகத் தான் இருந்து வருகிறது மூன்று நாட்கள் முடிவில் மட்டும் நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் வசூல் 17 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் பிரின்ஸ் படக்குழுவும் சரி, நடிகர் சிவகார்த்திகேயனும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது அதாவது தீபாவளியை முன்னிட்டு நடிகர் நடிகைகள் வெடி வெடித்து தீபாவளியை கொண்டாடிய வீடியோக்கள் பல வெளிவந்து வைரலாகின.. அதேபோல நடிகர் சிவகார்த்திகேயனும் தீபாவளிக்கு வெடி வெடித்து தீபாவளியை செம்மையாக கொண்டாடி உள்ளார்..

அந்த வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது வீடியோவை பார்த்த பலரும் வாழ்த்து கூறியதோடு மட்டுமல்லாமல் அந்த வீடியோவிற்கு லைக்களையும், கமெண்ட்களையும் அள்ளி வீசி அசத்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..