தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்களில் ஒருவர்தான் சிவகார்த்தியன் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியேறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆம் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் தற்போது முடிவடைந்துவிட்டது மேலும் இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா அவர்கள் நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சேர்ந்த கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இது குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.
மேலும் இந்த பதிவில் பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்றும் தீபாவளி அன்று திரையரங்குகளில் உங்களை சந்திக்கிறோம் என்று இந்த பதிவில் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் பிரின்ஸ் படுத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய ரசிகர் மத்தியில் மிகவும் வைரலானது. அதனைத் தொடர்ந்து பிரின்ஸ் திரைப்படத்தை விட ரசிகர்கள் மாவீரன் படத்திற்காக தான் காத்திருக்கிறார்கள் என்ரே சொல்லலாம்.