நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்த நாளில் இருந்து இப்பொழுது வரையிலும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான கதைகள் பிடிக்கும் என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு நடித்து வருவதால் தொடர்ந்து வெற்றியை சம்பாதித்து வருகிறார்.
மேலும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கூட இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்து புதிய சாதனை படைத்தது இதனால் நடிகர் சிவகார்த்திகேயனும் சந்தோஷமாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
அந்த வகையில் முதலாவதாக டான் திரைப்படம் வெகுவிரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பாண்டியராஜ் இயக்கத்தில் முதலில் நடித்த திரைப்படம் மெரினா. இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்று இருந்தாலும் இந்த படத்தில் நடந்த ஒரு சிறப்பான சம்பவம் தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியராஜன் சிவகார்த்திகேயனை அழைத்திருந்தார் அப்போது அவரிடம் உனக்கு பைக் வீலிங் பண்ண தெரியுமா என கேட்டுள்ளார் அதற்கு அவரோ ஆம் காலேஜ் படிக்கும்போது பண்ணி இருக்கிறேன் என கூறி உள்ளார் உண்மையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பைக் வீலிங் பண்ணவே தெரியாதாம்.
ஆனால் சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக கற்றுக்கொள்ளலாம் என நினைத்துள்ளார் ஆனால் இயக்குனரோ அடுத்த நாளே பைக் வீலிங் பண்ணுமாறு கேட்டுள்ளார். ஷாக்கான சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் தனக்கு தெரியாது என கூறி சிக்கிக் கொண்டாராம்.