சினிமா உலகில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபலங்களுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்பு சினிமாவில் இருந்து வந்துள்ளது அந்த வகையில் 90 காலகட்டங்களில் இருந்து பல்வேறு படங்களில் காமெடியனாகவும் ஹீரோவாகவும் நடித்து அசத்தி மக்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தவர் வடிவேலு.
இவர் சினிமாவில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்து பின் அந்த பிரச்சினைகளை எல்லாம் ஒரு வழியாக முடிந்து தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ள வடிவேலுவை கமிட் செய்ய ஆரம்பத்திலேயே தயாரிப்பாளரும் இயக்குனரும் போட்டி போட்டனர்.
அதற்கேற்றபடி ஹீரோவாக நடிக்கும் படங்களில் முதலில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் முதலில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு தான் இனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களில் நடித்து விட்டு அதன் பின் தான் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பது என கூறியுள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் தனது படத்தில் வடிவேல் நடித்தால் சிறப்பாக இருக்கும் என இயக்குனரிடம் சொல்லி உள்ளார் இயக்குனர் வடிவேலிடம் போய் கேட்டதற்கு வடிவேலுவும் முடியாது என ஒரே வார்த்தையில் கூறி விட்டாராம். இது இப்படி இருக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் திடீரென இவர் நடிக்க ஒத்துக் கொண்டது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.
சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்காமல் இவர் இப்படி உதயநிதியுடன் படத்தில் நடிக்க ஒத்துகொண்டார் என்பது தற்போது பலரின் கேள்வி குறியாக இருந்து வந்துள்ளது. எது எப்படியோ மாரிசெல்வராஜ் ஒரு சிறந்த இயக்குனர் அவரது படத்தில் வடிவேலு நடிப்பது அந்த படத்திற்கான எதிர்பார்ப்பை தற்போது அதிகரிக்க வைத்துள்ளது.