சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பல நடிகர்கள் சாதித்து வருகிறார்கள் அந்த வகையில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மிமிகிரி திறமையை காட்டி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.
அதன் பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார் அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் இவரை தொகுப்பாளராக ஏற்றுக் கொண்டார்கள்.மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பையும் திறமையையும் பார்த்து சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.
அந்தவகையில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் தடுமாறிய சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
தற்பொழுது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வந்துள்ளார் அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு படங்களில் நடிப்பதற்கு கோடி கணக்கில் சம்பளம் உயர்ந்துள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய டாக்டர் திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த ஊரான திரு வீழிமிழலையில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். மேலும் புதிய வீட்டில் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த பூஜை விழாவில் அருவி வாழ் திரைப்பட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் சகோ ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் இதோ அந்த புகைப்படம்.