குறுகிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், டான், டாக்டர், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இப்படி பல வெற்றி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் தற்போது பல கோடி கடனாளியாக மாறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் அது மட்டுமல்லாமல் தற்போது சூரி அவர்கள் நடிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் எந்த அளவிற்கு வெற்றி படங்களை கொடுத்துள்ளாரோ அதே அளவிற்கு பல தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஹீரோ, மிஸ்டர் லோக்கல், பிரின்ஸ், சீமா ராஜா, உள்ளிட்ட தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார்.
இந்த தோல்வி படங்களால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெரிய கடனாளியாக மாற்றியது. அதன் பிறகு இந்த கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என்று நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, வாழ், உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்து அதை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வந்தார்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டான் மற்றும் டாக்டர் ஆகிய படங்கள் மிக உறுதுணையாக இருந்தது. கொஞ்சம் அடைத்த கடனை மேலும் கடனாளியாக ஏற்றி விட்டது பிரின்ஸ் திரைப்படம். அதாவது பிரண்ட்ஸ் திரைப்படத்தின் தோல்வியால் படக்குழுவினருடன் சேர்ந்து ஆறு கோடி நஷ்ட ஈடு கொடுத்து இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படம் கிடப்பில் கிடக்கும் நிலையில் இந்த படத்தின் காட்சிகள் பலருக்கும் திருப்தி இல்லாததால் அயலான் படத்தின் பாதி காட்ச்சிகளை ரீசூட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பல பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.