நடிகர் சிவகார்த்திகேயன் மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும்படியான திரைப்படங்களை ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் கொடுத்துக் கொண்டு வருவதால் இவரது திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்துவதோடு குடும்பம் குடும்பமாக இவரது திரைப்படத்தை பார்த்து கண்டுகளித்து வருகின்றனர்.
அதன் விளைவாகவே இவர் தனது சம்பளத்தை பலகோடி உயர்த்துவதோடு குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இப்படி ஒரு நல்ல இடத்தை மென்மேலும் தக்கவைத்துக்கொள்ள இவர் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார் கடைசியாக கூட நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்து டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
டாக்டர் படம் எதிர்பார்க்காத அளவிற்கு சிவகார்த்திகேயன்னுக்கு பேரையும், புகழையும் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் 100 கோடியை வசூலித்து அவரை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு அடுத்த வருடம் 14ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. அடுத்ததாக அயலான் படத்தில் நடிக்கிறார் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிகுமார் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.
இந்த திரைப்படம் மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது. அதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் இந்த படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என தெரியவருகிறது.
அதன் பின் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படம் பண்ண இருக்கிறாராம் இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ராஜேஷ் குமார் இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தெரியவருகிறது. தெலுங்கிலும் இயக்குனர் அனுதீப் இயக்கும் பைலிங்குவல் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் சூட்டிங் ஜனவரி மாதம் தொடங்க இருக்கும் என தெரியவருகிறது. இந்த காரணங்களால்தான் அடுத்த வருடம் அவர் தொட முடியாத அளவிற்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார்.