தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்குபெற்று அதன் மூலம் சில வருடங்கள் தொகுப்பாளராக பணியாற்றி தனது விடாமுயற்சியினால் தவிர்க்கமுடியாத நாயகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவரின் சிறந்த நடிப்பு திறமையால் தான் தற்பொழுது இரண்டாம் கட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் தொடர்ந்து இவர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்த நிலையில் கொரோனா பிரச்சனையினால் தற்போதுதான் படக்குழுவினர்கள் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இத்திரைப்படத்தினை நயன்தாரா யோகி பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இளம் இயக்குனர்களின் திரைப்படமான டான், சிங்கப் பாதை உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவ்வாறு தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் இவர் இத்திரைப்படங்களுக்கு பிறகு தெலுங்கில் கால் வைக்க உள்ளாராம்.
சிவகார்த்திகேயன் தெலுங்கில் நடிக்க உள்ள முதல் படத்தை சுமார் 4 கோடி பட்ஜெட்டில் உருவாகி 60 கோடி வசூல் செய்த மிகப்பெரிய சாதனை படைத்த அனுதீப் என்பவர் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அதோடு இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே இத்திரைப்படத்திற்கான நடிகையை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான நடிகைகளை பரிந்துறைத்துள்ளார் தயாரிப்பாளர். ஆனால் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறும் என தயாரிப்பாளருக்கு டிப்ஸ் அளித்துள்ளாராம்.
இதற்கு தயாரிப்பாளர் கிட்டத்தட்ட ராஷ்மிகாவிற்கு 5 கோடி சம்பளம் வந்துவிடும் என்று கூறி உள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ராஷ்மிகா மந்தனா எப்படியாவது இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்து விடுங்கள் என்று கூறியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.