Arun vijay : நடிகர் அருண் விஜய் ஆரம்பத்தில் நல்ல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் எந்த ஒரு பட வாய்ப்பு இல்லாமல் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார் இந்த நிலையில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து விட்ட இடத்தை மீண்டும் பிடித்தார் அதன்பிறகு நடித்த பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.
என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக தான் நடித்திருந்தார் இந்த திரைப்படம் அருண் விஜயின் வாழ்க்கையை திருப்பி போட்டது இதனைத் தொடர்ந்து குற்றம் 23, தடம் ஆகிய திரைப்படங்கள் அருண் விஜய்க்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய்க்கு ஒரு பனிப்போர் நடந்து வந்துள்ளது.
அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய சீமராஜா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகியது இந்த திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது அதிகாலை காட்சி கொடுக்கப்பட்டிருந்ததால் அருண் விஜய் யார் யார் எல்லாம் மாஸ் பண்றது விவரத்தையே இல்லாம போச்சு தமிழ் ஆடியன்ஸுக்கு தெரியும் உண்மையான திறமை என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அருண் விஜய் இப்படி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது உடனே அருண் விஜய் தன்னுடைய twitter பக்கம் ஹேக் செய்து விட்டதாக கூறியிருந்தார் அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் அருணஜியை கலாய்ப்பது போல் ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது இப்படி இருவருக்கும் மிகப்பெரிய கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரது கல்யாணத்திற்கு இருவரும் சென்று உள்ளார்கள் அந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் வரும்பொழுது அருண் விஜய் ஓரமாக ஒதுக்கப்பட்டுள்ளார் இது அருண் விஜய்க்கு இன்னும் கோபத்தை அதிகரித்தது.
அப்படி இருக்கும் நிலையில் அருண் விஜய் தன்னுடைய மகன் பிறந்த நாளுக்கு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருந்தார் இதனைப் பார்த்த சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தது மட்டுமல்லாமல் ஓ மை டாக் திரைப்படத்தையும் பாராட்டி கூறியிருந்தார் இந்த செயலுக்கு அருண் விஜய் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி கூறினார் அதன் பிறகு இருவரும் சமரசமாக நடந்து கொண்டார்கள்.