டாக்டர் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்.!

sivakarthikeyan

தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து பின்பு பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாக நடித்து தற்போது கதாநாயகனாக நடித்து கொடி கட்டி பறந்து வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்.

பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளித்திரையில் நுழைந்து தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகராக வளம் வருகிறார் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகிக் கொண்டே போகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று தான் டாக்டர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டும் ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து வெளியாகவில்லை.

இருப்பினும் டாக்டர் திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள்மோகன்,தொகுப்பாளினி அர்ச்சனா,யோகி பாபு, உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளதால் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக பல ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

எப்பொழுது தான் இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆம் டாக்டர் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் மற்றும் அயலான் போன்ற திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த திரைப்படங்களையும் எதிர் பார்த்து வருகிறார்களாம்.டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த திரைப்படங்களை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் கமிட்டாகி வருவதாகவும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.