விஜய் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளராக பணியாற்றிவிட்டு பின்பு சினிமாவில் கால் தடம் பதித்தவர் சிவகார்த்திகேயன், இவர் தன்னுடைய திறமையால் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், அதுமட்டுமில்லாமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார்.
யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் தன்னுடைய திறமையால் மட்டுமே சினிமாவில் கால்தடம் பதித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார், சமீப காலமாக சினிமாவில் வாரிசு நடிகர்கள் தான் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். அவர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்திருப்பவர் அதுமட்டுமில்லாமல் பெற்றோர் மீது அதிக அன்பு வைத்துள்ளார், அதனால் தன்னுடைய அம்மாவின் விருப்பப்படி அவருக்கு பிடித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி வசதியான பெண் என்றாலும் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு முறையும் தடுக்கி விழும் பொழுது வாழ்க்கையில் தூக்கி விடுவார் என பலமுறை மேடையில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார் தன்னுடைய மனைவி தனக்கு பக்கபலமாக இருப்பார் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றுள்ளது இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என கூறுகிறார்கள் இந்த நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாக வருகிறது.
இந்த புகை படத்தில் சிவகார்த்திகேயன் சிறுவயது பயனாகவும் அவரின் மனைவி ஆர்த்தி மிகவும் சிறு வயது பெண்ணாகவும் இருக்கிறார் இதனை ரசிகர்கள் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.