sivakarthikeyan imman : சமூக வலைதளத்தில் ஒரு மாத காலமாக மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி தான் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் பிரச்சனை இந்த பிரச்சனை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை, சமூக வலைதளத்தில் ஆளாளுக்கு ஒரு கதையை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இமான் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்துவிட்டார் என கூறினார் இதுதான் பெரும் பூதாகரமாக வெடித்தது.
இதற்கு பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார்கள். அதிலும் வலைப்பேச்சு அந்தணன் பிஸ்மி இருவரும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே இது போல் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். இப்பொழுது இமான் அவர்களிடம் தன்னுடைய கைவரிசையை காட்டியுள்ளார். இவ்வளவு நாள் சிவகார்த்திகேயன் அனைவரிடமும் நல்ல பெயரை எடுத்துவிட்டு இதுபோல் சம்பவத்தில் இறங்கி உள்ளது வேதனை தரும் செயலாக இருக்கிறது எனக் கூறியிருந்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் போனில் இமான் அவர்களிடம் கெஞ்சும் தோரணையில் முதலில் வீடியோவை நீக்க சொல்லியும் பிறகு மிரட்டுவது போல் வீடியோவை நீக்க சொல்லியும் அவர் பேசியுள்ளார் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக வலைப்பேச்சு பிரபலம் கூறியிருந்தார். இப்படி ஆளாளுக்கு ஒரு கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அனுபரமி காட்டமாக பேசி உள்ளார்.
அவர் கூறியதாவது எல்லா ஆண்களுமே டி இமான் செய்யும் தவறு தான் செய்து கொண்டிருக்கிறார்கள் ஒரு கணவனுக்கு அவரின் மனைவி எல்லா விஷயங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்கள் அதேபோல் வீட்டையும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டு உறுதுணையாக இருந்தாலும் தொடர்பு வைத்துக்கொண்டால் அவளை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கேவலப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இதையே ஒரு ஆண் செய்தால் இந்த சமூகம் எந்த ஒரு கேள்வியும் கேட்காது ஆனால் ஒரு பெண் செய்து விட்டால் அவ்வளவுதான் அந்தப் பெண்ணை இழிவாக பேசி சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். இந்த தவறை தான் பல ஆண்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் ஒரு மனிதன் எந்த நொடியில் என்னவாக மாறுகிறான் என்பதை அந்த சூழ்நிலை பொருத்து அமைகிறது.
சிவகார்த்திகேயனை பலரும் கட்டம் கட்டி இருக்கிறார்கள் தெரிந்து திட்டமிட்டு உலகத்தாரிடம் கற்களை கொடுத்து டி இமான் மூலம் எறிய வைத்துள்ளார்கள் இதனால் என்னுடைய அபிப்ராயம் என்னவென்றால் இந்த விஷயத்தில் இருந்து சிவகார்த்திகேயனும் சிவகார்த்திகேயன் மனைவி இருவரும் மீண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.