sivakarthikeyan and imman issue : சிவகார்த்திகேயன் மற்றும் இமான் குறித்த பிரச்சனை தான் சமூக வலைதளத்தில் நீண்டு கொண்டே போகிறது இதற்கு ஒரு முடிவே இல்லையா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது. அதேபோல் ஒவ்வொரு நாளும் இந்த பிரச்சனை புகைந்து கொண்டிருக்கிறதே தவிர அனைவது போல் தெரியவில்லை.
சமூக வலைதளத்தில் எத்தனையோ பிரச்சனைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகக்கோப்பை என ஏதேதோ டிரெண்டிங்கில் இருந்தாலும் சிவகார்த்திகேயன் பிரச்சனை தான் டாப்பில் இருந்து வருகிறது. எதற்காக சிவகார்த்திகேயன் அமைதியாக இருக்கிறார் ஒட்டுமொத்த இணைய பக்கங்களிலும் அவரைப் பற்றி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த விஷயத்தை ஆரம்பத்தில் இருந்து அக்குவேராக ஆணிவேராக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கும் பத்திரிகையாளர் பிஸ்மி மீண்டும் ஒரு புதிய அணுகுண்டை வீசி உள்ளார். அவர் கூறியதாவது சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட சில வீடியோக்களை நான் பார்த்தேன் அது மட்டும் இல்லாமல் சில ஆடியோக்களையும் நான் கேட்டேன் அதில் முதலில் இமான் அந்த பேட்டி கொடுத்தவுடன் அந்த வீடியோவை நீக்குமாறு இமானிடம் கெஞ்சுவது போலவும் அதன் பிறகு கொஞ்சம் மிரட்டுவது போலவும் சிவகார்த்திகேயன் கேட்டுள்ளார்.
சில வாட்சப் ஆதாரங்களையும் ஆடியோ கலையும் நான் பார்த்துள்ளேன் நான் உறுதியாக சொல்கிறேன் கண்டிப்பாக இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் வாயை திறக்கவே முடியாது. அதனால் அப்படியே கடந்து போய்விடலாம் என நினைக்கிறார் அது மட்டும் இல்லாமல் தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் இணைய பக்கங்களில் தனக்கு ஒரு ஆதரவான பிம்பத்தை எப்படியாவது உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
அதற்காக பெருந்தொகையை செலவிட்டு வருகிறார் இவ்வளவு நாளாக சிவகார்த்திகேயன் இப்படி செய்தாரா.? இல்லையா.? என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வந்தது ஆனால் பத்திரிகையாளர் பிஸ்மி நான் அந்த வீடியோவை பார்த்து இருக்கிறேன் ஆடியோவை கேட்டு விட்டேன் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனாலும் சிவகார்த்திகேயன் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை இவ்வளவு மவுனமாக இருப்பதற்கு காரணம் என்ன.? எதற்காக இந்த விஷயத்தில் வாய் திறக்காமல் இருக்கிறார் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.