தனுஷை முந்திய சிவகார்த்திகேயன்.! வசூலில் அசுரன் படத்தை ஓவர்டேக் செய்த “டான்” படம் .

dhnaush-and-sivakarthikyen
dhnaush-and-sivakarthikyen

டிவி தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்து பின்பு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் முதலில் வெள்ளித்திரையில் தனுஷ்.

நடிப்பில் வெளிவந்த மூணு திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்து அறிமுகமானார். பின்பு ஹீரோவாக அவர் நடிக்கத் தொடங்கிய அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அந்த வகையில் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் திரைப்படம்.

சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு முக்கிய திருப்புமுனை படமாக மாறியது. அதனால் சிவகார்த்திகேயனின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு தனுஷ் ஒரு முக்கிய பங்கு வகித்தார். இதனிடையே சமீபத்தில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் கடந்த மே 13-ம் தேதியன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்து வருகின்றன.

அதன் படி ஒவ்வொரு நாளும் டான் படம் வசூலில் அடித்து நொறுக்குகிறது. இதனிடையே தற்போது வரை டான் திரைப்படம் 78 கோடி வசூலை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் சிவகார்த்தியன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் டான் படமும்..

கூடிய விரைவில் 100 கோடி வசூலைத் தொட்டு பாக்ஸ் ஆபீஸ் இல் இடம்பெறும் என தெரியவருகிறது. இந்த நிலையில் டான் படம் தற்போது வரை 78 கோடியை கடந்த நிலையில் தனுஷின் அசுரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை டான் படம் முறியடித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.