sivakarthikeyan activity changed after result :சமீபத்தில் தியேட்டர்காரர்கள் வெளியிட்ட லிஸ்ட்டால் சூர்யா மற்றும் சூர்யா ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வரும் நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் செய்த செயலால் சூர்யா உள்பட பல்வேறு பிரபலங்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் இவர் தன்னுடைய பேச்சு திறமையின் மூலமாக திரைப்படங்களில் நடித்து எளிதில் ரசிகர்களை கவர்ந்து விட்டார் இதனை தொடர்ந்து அவருடைய மார்க்கெட்டும் தமிழ் சினிமாவில் அதிகமாகிவிட்டன.
அதுமட்டுமில்லாமல் அதற்கு தகுந்தாற்போல் திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படம் வெளியாகும்போது தியேட்டரில் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது ஏனெனில் முன்னணி நடிகர்களை மிஞ்சும் அளவில் சிவகார்த்திகேயனும் ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தியேட்டர்காரர்கள் வெளியிட்ட லிஸ்ட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் பெயரானது இரண்டாம் கட்ட நடிகராக இருந்தது மட்டுமல்லாமல் முன்னணி நடிகராக இருந்த சூர்யாவின் பெயரும் இரண்டாம் கட்ட நடிகர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டாக்டர் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதற்காக அமேசான் நிறுவனத்திடம் 60 கோடி வரை பேரம் பேசி வருகிறாராம். ஆனால் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தில் கூட இவ்வளவு பணம் அமேசான் நிறுவனம் கொடுக்கவில்லையாம்.
ஆனால் டாக்டர் திரைப்படமானது பெரிய முதலீட்டை போட்டு எடுக்கப்பட்ட காரணமாக இந்த திரைப்படத்தில் விலையையும் கொஞ்சம் அதிகரித்து தான் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்நிலையில் கோலிவுட் வட்டாரத்தில் சூர்யாவின் படத்தை விட தன்னுடைய படம்தான் அதிக ரேட்டிற்க்கு விற்பனையானது என்பதை காட்டிக் கொள்வதற்காக சிவகார்த்திகேயன் இப்படி செய்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.