சினிமா பிரபலம் சிவகார்த்திகேயன் தன்னுடைய மூன்றாவது குழந்தையின் பெயரை எக்ஸ் வலைதளத்தில் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாயகனாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் முதன்முதலில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.. தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்ற அந்தஸ்தை அடைந்தார்..
தற்பொழுது சிவகார்த்திகேயன் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆர்த்தி என்ற மாமா மாமாமகளை திருமணம் செய்து இருந்தார். இந்த தம்பதிக்கு ஆராதனா என்கின்ற மகளும் குகன் என்ற மகனும் இருந்தார்கள்.
மேலும் சிவகார்த்திகேயன் இடைப்பட்ட காலத்தில் சில சர்ச்சைகளில் சிக்கினார். அதை எல்லாம் தற்பொழுது கடந்து ஜூன் இரண்டாம் தேதி தன்னுடைய மூன்றாவது ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி வீடியோவை ச வலைத்தளமான எக்ஸ் வலைதளத்தில் வெளியி்டு தன்னுடைய மூன்றாவது குழந்தையின் பெயரை பவன் என சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது அந்த வீடியோ.
https://twitter.com/Siva_Kartikeyan/status/1812698610724945956?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1812698610724945956%7Ctwgr%5E4bb18a116c05769c8a5a87d0e998d12467998211%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2024%2FJul%2F15%2Fdo-you-know-the-name-of-sivakarthikeyans-3rd-child