பீஸ்ட் பற்றி வாய் திறக்காத சிவகார்த்திகேயன் KGF-2 பற்றி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

kgf-2
kgf-2

கன்னட நடிகர் யார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பிரசாந்த் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் கேஜிஎப். இந்த திரைப்படத்திற்கு ஒரு நாள் முன்பே விஜியின் பீஸ்ட் திரைப்படமும் வெளியானது இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய நடிகர்களின் திரைப்படம்.

அதேபோல் இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. kgf முதல்பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் இந்த kgf இரண்டாவது பாகம ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது ஏனென்றால் படத்தைப் பார்த்த பல விமர்சகர்கள் மற்றும் மக்கள் அனைவரும் கேஜிஎஃப் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள் அது மட்டுமில்லாமல் படத்தை பாராட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல் இரண்டு நாள் வசூல் விவரம் வெளிவந்துள்ளது.  கேஜிஎப் திரைப்படம் இதற்கு முன்பு வெளியாகிய படங்களின் வசூல் ரெக்கார்டை  ஓரங்கட்டி உள்ளது. இந்தநிலையில் பல சினிமா பிரபலங்கள் கேஜிஎஃப் திரைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் நடித்த யாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்கள் அந்த வகையில் இதற்கு முன் கார்த்தி அவர்கள் KGF திரைப்படத்தைப் பற்றி புகழ்ந்து பேசி ஒரு பதிவை வெளியிட்டார். அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களும் இரண்டாவது பாகத்தை புகழ்ந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சினிமா பிரபலங்களும் KGF 2 திரைப்படத்தை புகழ்ந்து வருகிறார்கள் ஆனால் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.