இதுவரை பலரும் பார்த்திராத சிவகார்த்திகேயனின் அக்கா.! வைரலாகும் புகைப்படம்.

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகர் மற்றும் நடிகைகள் வரத்து அதிகரித்துக் கொண்டே போகிறது அந்தவகையில் சந்தானம் சிவகார்த்திகேயன், வாணி போஜன்,  ப்ரியா பவானி ஷங்கர் என நடிகர் மற்றும் நடிகைகளை கூறிக்கொண்டே செல்லலாம். இதனையில் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் நுழைந்தவர்.

அறிமுகப்படுத்தியது தனுஷ் என்று கூறலாம் ஏனென்றால் மூன்று என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு நண்பனாக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார் விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு வெளியாகிய மெரினா என்ற திரைப்படத்தின் மூலம்  நடிகனாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 3 என்ற திரைப்படம் மனம் கொத்தி பறவை கேடி பில்லா கில்லாடி ரங்கா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் நடிப்பில் வெளியாகிய எதிர்நீச்சல் திரைப்படம் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய திரைப்படங்கள் இவரின் சினிமா வாழ்க்கையை திசை மாற்றியது. இவருக்கு இந்த திரைப்படங்கள் சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

மான் கராத்தே காக்கி சட்டை ரஜினி முருகன் ரெமோ வேலைக்காரன் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டாக்டர் திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதன்பிறகு வெளியாகிய டான் திரைப்படமும் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

சமீப காலமாக சிவகார்த்திகேயன் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் பிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவாவின் மனைவியை பார்த்திருப்பீர்கள் ஆனால் அவருடைய அக்காவை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

siva
siva

இந்தநிலையில் சிவகார்த்திகேயனின் அக்காவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாக வைரலாக வருகிறது சிவகார்த்திகேயனின் அக்கா கௌரி மனோகரி திருச்சியில் பிரபல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

siva