கமலஹாசனின் நடிப்பு திறமையை பார்த்து மெய்சிலிர்த்துப் போன சிவாஜி..! பல வருட ரகசியத்தை உடைத்த பிரபல இயக்குனர்..

kamal-
kamal-

உலக நாயகன் கமலஹாசன் திரை உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து சபாஷ் நாயுடு,  தேவர்மகன் 2, வேட்டையாடு விளையாடு 2 போன்ற படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார்.

இதனால் கமலின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் கமலை வைத்து சிங்காரவேலன் படத்தை எடுத்த ஆர்வி உதயகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலஹாசன் மற்றும் சிவாஜி குறித்து சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஆர் வி உதயகுமார் ஒரு தடவை சிவாஜி உடல்நிலை சரியில்லாத போது அவரை பார்க்க சென்று இருக்கிறார் அப்பொழுது சிவாஜிக்காக ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த கதையோடு சென்று இருக்கிறார் சிவாஜி காலடியில் அமர்ந்து காலை பிடித்து அமுக்கி கொண்டு இருந்தாராம்..

உதயகுமார் அப்பொழுது அந்த கதையையும் சொல்லி இருக்கிறார் கதையை கேட்ட சிவாஜி அது இருக்கட்டும்.. கமலின்னு ஒரு பையன் இருக்கிறானே அவன் என்னமோ நடிக்கிறான் ஷட்டில் ஆக்டிங் அவன் கிட்ட இருக்கு ஆனால் என்கிட்ட ஸ்டைலிஷான ஆக்டிங் தான் என்று கூறினாராம்..

மேலும் அவர் கூறும் பொழுது நான் இருந்தாலும் கொஞ்சம் ஓவரா தான் நடிக்கிறேன்.. கமல் எவ்வளவு பிரமாதமாக நடிக்கிறான் என்று வியந்து கூறினாராம் அந்த அளவிற்கு நடிப்பின் மீது பேரன்பு கொண்டவர் கமலஹாசன் அவரிடமிருந்து நடிப்பு கற்றுக் கொள்ளுங்கள் என ஆர் வி உதயகுமார் பேசி இருந்தார் இந்த செய்தியை தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.