70,80 காலகட்டங்களில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பார்க்கப்பட்டவர் சிவாஜி கணேசன். இவருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாக மாறி நடிப்பதால் இவரது படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக மாறின மேலும் இவருக்கென ஒரு தனி கூட்டமும் இருந்தது.
திரை உலகில் வெற்றியை கண்டு ஓடிய இவர் நிஜ உலகிலும் மிகவும் சாந்தமாகவும், அதே சமயம் பண்புடனும் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் இவரை பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது நடிகர் திலகம் சிவாஜி பல நடிகைகளுடன் நடித்திருந்தாலும் நடிகை பத்மினியுடன் இவர் அதிக படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் இணைந்து தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதி சபதம், செல்வம், வியட்நாம் வீடு, தாய்க்கு ஒரு தாலாட்டு, திருமால் பெருமை என கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் ஒன்றாக நடித்து வெற்றி கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜோடி மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்த ஜோடியாக அப்பொழுது பார்க்கப்பட்டது.
இதனாலையே அந்த சமயத்தில் பத்திரிக்கையில் சிவாஜியும், பத்மினியும் காதலில் விழுந்தனர் என கிசுகிசுக்கள் அதிகம் கிளம்பின.. ஆனால் இதை அவர்கள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இணைந்து ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது அந்த படத்தில் சிவாஜி பத்மினிக்கு தாலி கட்டும்படியான காட்சி எடுக்கப்பட்டது ஆனால் நடிகை பத்மினி அதை நிஜ கல்யாணமாகவே நினைத்துக் கொண்டு அந்த தாலியை ஆறு மாதம் மறைத்து வைத்திருக்கிறார்.
பிறகு பத்மினியின் சகோதரிக்கு தெரிய வந்த பிறகு அம்மாவிடம் கூறியிருக்கிறார் இதை கேட்டதும் அதிர்ச்சியான பத்மினி அம்மா நிஜ வாழ்க்கை வேறு சினிமா வாழ்க்கை வேறு அப்படி சினிமாவுக்காக கட்டிய தாலியை நீ கழுத்தில் போட்டிருப்பது மிக தவறு என பத்மினிக்கு புரிய வைத்த பின் கழுட்டி இருக்கிறார் அதன் பிறகு பத்மினி 1961 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இந்த செய்தி இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.