படையப்பா ஷூட்டிங் ஸ்பாட்டில் குணச்சித்திர நடிகரை பற்றி புகழ்ந்து பேசிய சிவாஜி..! சோகமான சூப்பர் ஸ்டார்.

rajini
rajini

60, 70 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் திலகம் சிவாஜி. இவர் இப்பொழுது இல்லை என்றாலும் இவரது புகழ் இன்றும் பேசப்பட்டு வருகிறது. சிவாஜி அவர்கள் எல்லா நடிகர்களுடன் சகஜமாக பேசினாலும் தூக்கி வைத்து புகழ்ந்து பேச மாட்டார்  யார்  கதைக்கு ஏற்றவாறு துல்லியமாக நடிக்கிறார்களோ அவர்களை  பற்றி மட்டுமே புகழ்ந்து பேசுவராம்.

அப்படி ஒரு குணச்சித்திர நடிகரை பற்றி சிவாஜி கணேசன் புகழ்ந்து பேசி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். 90 கால கட்டங்களில் உதவி இயக்குனராக இருந்து பின் நடிகனாக விஸ்வரூபம் எடுத்தவர் ரமேஷ் கண்ணா. முதலில் உதவி இயக்குனராக பல டாப் இயக்குனர்களுடன் பணியாற்றினார். ஒரு கட்டத்தில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் உருவான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் காமெடி நடிகராக  அறிமுகமானார். சூப்பராக நடித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு போன் செய்து பாராட்டினாராம் அது மட்டுமல்லாமல் அந்த படத்தை குடும்பத்துடன் பார்த்ததாக தெரிவித்தார். மேலும் அடுத்த படத்தில் என்னுடன் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறினாராம். இந்த சமயத்தில் தான் கே எஸ் ரவிக்குமார் ரஜினி வைத்து படையப்பா படத்தை எடுக்க ஆரம்பித்தார்.  முதல் நாள் படப்பிடிப்பு  கேமராவை எல்லாம் ஏற்றுக் கொண்டு மைசூர் அரண்மனையில் இறங்கி இருக்கிறார்கள்.

முதல் ஆளாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  வந்தார் பின்  படக்குழு வந்தது இதை பார்த்த சிவாஜி உள்ளே செல்ல படி ஏறி . போய்க்கொண்டிருக்க நொடிக்கு ஒரு முறை ரமேஷ் கண்ணாவை  பார்த்துக் கொண்டே இருந்தாராம். பக்கத்தில் இருந்த அவர்கள் அந்த பையனை திட்ட போகிறார் என நினைத்தார்கள் ஆனால் சிவாஜி பக்கத்தில் இருந்தவர்களிடம் அந்த பையனை தெரியுமா.?

என்று கேட்க அவர்களோ தெரியாது என சொல்ல.. உடனே அவன் மகாநடிகன் முத்துராம் பையன் கூட ஒரு படம் நடித்துள்ளான் அவ்வளவு அருமையாக இருக்கும் என பாராட்டினாராம் அது மட்டுமல்லாமல் அன்று செட்டில் இருந்த எல்லோரிடமும் ரமேஷ் கண்ணா குறித்து தான் தொடர்ந்து பேசினாராம் இதை பார்த்த ரமேஷ் கண்ணாவிற்கு கண்ணீரை வந்துவிட்டதாம் இதனை பேட்டியில் அவரே தெரிவித்தார். ரஜினி அவரிடம்  25 வருடமாக நடித்து வருகிறேன் என்னை ஒருமுறை கூற சிவாஜி அவர்கள் இப்படி பாராட்டியது கிடையாது உனக்கு மட்டும் என்ன இத்தனை முறை பாராட்டு என ரமேஷ் கண்ணாவிடம் கூறினாராம்.