அண்ணாத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டு முன்னணி நடிகர்களுக்கு வலை வீசிய சிறுத்தை சிவா..!

shiva
shiva

தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான சிறுத்த என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் தான் சிறுத்தை சிவா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என பல்வேறு திரைப்படங்களை உருவாக்கி வெற்றி கண்டவர்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் இத்திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மாபெரும் வெற்றி கண்டுள்ளது.  அந்த வகையில் என்னதான் இந்த திரைப்படத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை கண்டுள்ளது.

அந்த வகையில் இத்திரைப்படமானது வெறும் 2 நாட்களில் மட்டும் 112 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.  இவ்வாறு இப்படி ஒரு சாதனையை படைத்து அதன் காரணமாக ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது நடிகர் சூர்யாவுக்கு ஒரு கதையை தயார் செய்து உள்ளதாக கூறினார். அதுமட்டுமல்லாமல் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்களை பார்த்தேன் திரைப்படங்கள் மிக சிறப்பாக இருந்தது மட்டுமல்லாமல் அந்த இயக்குனர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் நான் கூட்டணி வைக்க ஆர்வமாக இருப்பது மட்டுமல்லாமல் சூர்யாவுக்காக ஒரு சுவாரசியமான கதையை நான் தயார் செய்து உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  இதனையடுத்து தளபதி விஜயுடன் ஒரு திரைப்படம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

vijay surya
vijay surya

அந்தவகையில் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது மட்டுமல்லாமல் நல்லதே நடக்கும் என சிவா குறிப்பிட்டுள்ளார் இதனால் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் வைத்து சிறுத்தை சிவா திரைப்படம் இயக்கப் போவது உறுதியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.