தமிழ் சினிமாவில் வசூலுக்கு பெயர் போனவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து நல்ல லாபத்தைக் கொடுத்து வந்தாலும் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த தர்பார் திரைப்படம் மட்டும் மிகப்பெரிய வசூலை பெற்று தராததால் ரசிகர்கள் மிகப்பெரிய ஒரு ஏமாற்றத்தை சந்தித்தனர்.
அதை ஈடுகட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடத்திலும் எதிரி தான் இருக்கிறது.
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியை குறி வைத்துள்ளதால் மிகப்பெரிய ஒரு வெற்றிபெறும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் படக்குழு வெகுவிரைவேயே அண்ணாத்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ஆகியவற்றை வெளியிட முன்புறமாக வேலை செய்து வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சிறுத்தை சிவா ரஜினியை அழைத்து படத்தின் முதல் காப்பியை போட்டு காண்பித்துள்ளார்.
படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாவ் செம்ம உண்மையிலேயே நான் எதிர்பார்க்காத அளவிற்கு படம் சூப்பராக வந்துள்ளது ரொம்ப சந்தோஷம் என கூறினார். மேலும் ரஜினி பெண்கள் மற்றும் குழந்தைகளை வெகுவாக இந்த படம் கவரும் என குறிப்பிட்டு பேசியுள்ளார்.