கமர்சியல் படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்த இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா இவர் இதுவரை சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இப்பொழுது கூட..
ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க நடிகர் சூர்யாவுடன் சிறுத்தை சிவா முதல் முறையாக இணைய உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் படத்தின் சூட்டிங் எப்பொழுது தொடங்கும் என பலரும் கேட்டுக் கொண்டு வந்தனர்.
தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது நடிகர் சூர்யா இயக்குனர் பாலா உடன் மீண்டும் ஒருமுறை கூட்டணி அமைத்து மீனவர்கள் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் கன்னியாகுமரி தூத்துக்குடி அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் 18 வயது நடிகை கீர்த்தி செட்டி மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றன இந்த படத்தின் சூட்டிங் வெகுவிரைவிலேயே முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா உடன் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெட்டேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது மேலும் ஷூட்டிங் கோவாவில் நடக்க படக்குழுவை திட்டமிட்டுள்ளதாம். இதை வைத்துப் பார்த்தால் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணைவது உறுதியாகியுள்ளது இச்செய்தி தற்போது சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.