மாடல் அழகி என்று கூட பார்க்காமல் பீர் பாட்டிலால் அடித்த நிக்கி கல்ராணியின் சகோதரி.! பின் என்ன நடந்தது தெரியுமா.?

sanjana-kalrani-
sanjana-kalrani-

கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சஞ்சனா கல்ராணி தற்போது தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் இருப்பினும் அவருக்கு பட வாய்ப்புகள் தற்போது சரியாக கிடைக்காமல் இருக்கிறது ஆனால் இவரது சகோதரி நிக்கி கல்ராணி தென்னிந்திய திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து சிறப்பாக பயணித்து வருகிறார்.

அவரை போலவே இவரும்  தென்னிந்திய திரை உலகில் சூப்பராக வர தற்போது முயற்சிக்கிறார் ஆனால் இடையில் அவ்வப்போது சில சர்ச்சையான விஷயங்களிலும் சிக்கிக்கொள்வது சஞ்சனா கல்ராணி வழக்கமாக இருக்கிறது.

சமிபத்தில் கூட போதை மருந்து வழக்கில் சம்பந்தப்பட்டு கைதானார் பின்னர் சில மாதங்கள் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார். இப்படி சில சர்ச்சையில் சிக்குவதால் இவர் மீது நல்ல பெயரும் கெட்ட பெயரும் அவ்வப்பொழுது வந்து வந்து போகின்றன.

இப்படி இருக்க கடந்த 2019 ஆம் ஆண்டு மாடல் அழகியான வந்தனா என்பவரை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதுகுறித்து வந்தனா போலீஸ்லில் புகார் கொடுத்திருந்தார் ஆனால் இந்த புகாரை கப்பன் பார்க் போலீஸாரும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில் வந்தனா ஜெயின் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சஞ்சனா கல்ராணி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கப்பன் பார்க் போலீஸாருக்கு உத்தரவிட்டது இதனையடுத்து அவரை பிடித்து பிறகு பதிவு போட்டு விசாரணையும் நடத்தி வருகின்றனர்.