சிறுத்தை படத்தில் கார்த்திக்குடன் நடித்த குட்டிக் குழந்தையா இது.! புகைப்படத்தை ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்

siruthai

2011 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா, சந்தானம் ஆகியோர்கள் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சிறுத்தை.  இந்த திரைப்படத்தின் மூலம் தான் தமிழில் சிவா இயக்குனராக அறிமுகமானார் அதனால் தான் இவருக்கு சிறுத்தை சிவா என பெயர் வந்தது.

மேலும் சிறுத்தை திரைப்படத்தை ஞானவேல் ராஜா மற்றும் எஸ்ஆர் பிரபு எஸ்ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம்  நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு குட்டி குழந்தை ஒருவர் நடித்திருப்பார் அவர் அந்தத் திரைப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவரின் பெயர் பேபி ரக்ஷனா.

இவர் தற்போது முன்னணி நடிகைகளுக்கு இணையாக வளர்ந்து விட்டார்.  அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் ஒரு அழகுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

siruthai movie child
siruthai movie child

இதைப்பார்த்த ரசிகர்கள் சிறுத்தை திரைப்படத்தில் குட்டி குழந்தையாக நடித்த நடிகையை இப்படி மடமடன்னு வளர்ந்து விட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.