தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சிவா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தில் கார்த்தி, தமன்னா, சந்தானம், பேபி ரக்ஷனா, அவினாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் தெலுங்கில் விக்ரமர்குடு என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த படம் தமிழில் சிறுத்தை என பெயரிட்டு ரீமேக் செய்யப்பட்டது. நிலையில் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பேபி ரக்ஷனா திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார். இந்நிலையில் நீண்ட வருடங்கள் கழித்து இவருடைய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான ரக்ஷனா தற்பொழுது முன்னணி நடிகைகள் அளவிற்கு முன்னேறி உள்ளார். சிறுத்தை படத்தினை தொடர்ந்து ஓகே கண்மணி, பாண்டியநாடு, கடல், திரிஷா இல்லைனா நயன்தாரா, நிமிர்ந்து நில் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நிலையில் அதில் அவர், நான் என்னுடைய மூன்றரை வயதிலிருந்து நடிக்கிறேன்.
இடையில் சில காலம் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதினால் சினிமாவில் இருந்து விலகி இருந்தேன் ஆனால் அந்த சமயத்தில் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தேன் தற்பொழுது தான் 11ஆம் வகுப்பு முடித்து 12ஆம் வகுப்பு செல்ல இருக்கிறேன் என்றார். சிறுத்தை படத்தில் நடிப்பதற்கு முன்னர் சில விளம்பரங்களில் நடித்திருந்தேன் அதனை பார்த்து விட்டு தான் இயக்குனர் சிவா தன்னை ஆடிஷனில் தேர்ந்தெடுத்தார்.
அப்பொழுது எனக்கு மூன்றரை வயது தான் ஆனது சிறுத்தை படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நான் மிகவும் விருப்பப்பட்ட நடித்தேன் கார்த்திக் அவர்கள் மிகவும் தன்னடக்கமான ஒரு மனிதர் தன்னுடைய பிறந்தநாள் எப்பொழுது வீட்டிற்கு பரிசுகளுடன் வந்தார் என ஏராளமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார் ரக்ஷனா.