Sirakadikka aasai serial September 24 : இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கிற்காக டிவி தொலைக்காட்சிகள் பல்வேறு விதமான கதைகளத்துடன் ஏராளமான சீரியல்களை கொடுத்து வருகின்றனர்.. அதில் ஒன்றுதான் “சிறகடிக்க ஆசை சீரியல்” இது விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது..
இதில் தற்பொழுது வீட்டுக்கு தெரியாமல் விஜயா வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து பணம் வாங்கின விஷயம் அண்ணாமலை, முத்து, மீனா, ரவி போன்றோருக்கு தெரிந்து விஜயா மேல் செம்ம கோவத்தில் இருக்கின்றனர்.. அந்த பணம் ரோகிணி பார்லர் வைக்க தான் வாங்கினேன் என்ற உண்மையையும் விஜயா போட்டு உடைத்து உள்ளார்..
இது தெரிந்து முத்து மீனாவும் பூ நல்லா கட்டுவா கோயம்பேட்டில் ஒரு பெரிய பூ கடையா வைக்கணும் அதுக்கும் வீட்டு மேல திரும்ப ஒரு பத்து லட்சம் கடன் வாங்கலாம், ரவிக்கு ஒரு பத்து லட்சம் என இன்னும் ஒரு இருபது லட்சம் வாங்கி தாங்க என்று சொல்கிறார்.. பிறகு விஜயா உனக்கு என்ன பணம் தானே பிரச்சனை இன்னும் நாலே நாள்ல 17 லட்சத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சவால் விடுகிறார்..
இந்நிலையில் சிறகடிக்க ஆசை அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் அண்ணாமலை விஜயா வாங்கிய 17 லட்சத்தையும் பைனான்சியரிடம் கட்டிவிட்டு வீட்டு பத்திரத்தை திரும்ப வாங்கியுள்ளார்.. பிறகு விஜயாவிடம் உன்ன இனிமே நான் நம்புறதா இல்லை என்று சொல்லிவிட்டு மீனா கையில் அண்
முத்துவும் இதை பீரோவில் வச்சி பூட்டி சாவியை பத்திரமா வெச்சிக்கோ என்று சொல்கிறார்.. ஆனால் விஜயா மீனாவிடம் நீ நெனச்சத சாதித்து விட்ட இல்ல என ஆணவத்தில் இருக்காத என்று கோபத்தில் திட்டும் படியான புரோமோ வெளியாகியிருக்கிறது..