முத்துவின் இதயத்தை குத்தி கிழித்த செல்வம் சொன்ன வார்த்தை.!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா மற்றும் தங்கை  இருவரும் முத்துவிடம் பேச வந்துள்ளார்கள் அப்பொழுது மீனாவை அழைத்தது நாங்கள் தான் அதனால் நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என மீனாவின் அம்மா கூற அதற்கு முத்து நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் நீங்களா தப்பு செய்தீர்கள் என கூறுகிறார்.

உடனே முத்து எனக்கு கார் சவாரி வந்துவிட்டது நான் கிளம்புகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார் அந்த சமயத்தில் மீனா தன்னுடைய தோழிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது முத்து மாதிரி ஒரு நல்ல புருஷன் அமைய நீ கொடுத்து வச்சிருக்கணும் நீ எதுக்கு அவர் பேச்சை மீறிட்டு போன என கேட்கிறார்கள் அதற்கு மீனா அம்மா கூப்பிடுறாங்க எப்படி நான் போகாம இருக்க முடியும் என பேசுகிறார்.

இந்த நிலையில் பக்கத்தில் உள்ளவர்கள் அவருக்கு பிடித்த உணவை சமைத்து வை கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார் எந்த சண்டையும் போட மாட்டார் என ஐடியா கொடுக்கிறார்கள் மீனாவும் சரி என கூறிவிட்டு கிளம்புகிறார். அப்பொழுது முத்து கார் செட்டில் இருந்து திடீரென சவாரி வருகிறது உடனே கிளம்புகிறார் அந்த லேடி அழுது கொண்டு காரில் ஏறுகிறார்.

காரிலேயே போய்க் கொண்டிருக்கும் பொழுது நீ அழுது கொண்டிருக்க முத்து எதற்காக அழுகிறீர்கள் என கேட்க உடனே என்னுடைய அண்ணன் ஹாஸ்பிடலில் இருக்கிறார் அவரை பார்க்க போகக்கூடாது என கணவர் சொல்லிவிட்டார் அதனால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்னை ஊட்டி வளர்த்தது என்னுடைய அண்ணன் தான் என கூறுகிறார் இதனால் முத்துவுக்கு கஷ்டமாக இருக்கிறது.

பிறகு அவர்களை டிராப் செய்துவிட்டு கார் செட்டுக்கு வந்த முத்து செல்வத்திடம் நடப்பதை கூற செல்வம் உன் அண்ணா மனோஜ் எவ்வளவு தப்பு பண்ணி இருக்கான் என்னைக்காவது சிஸ்டர் அவன் கூட பேச கூடாதுன்னு சொல்லி இருக்காங்களா என கேள்வி கேட்கிறார். அதற்கு முத்து இல்லை என கூறுகிறார் செல்வம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் முத்துவால் பதில் கூற முடியவில்லை ஒழுங்காக ஓய் சிஸ்டர் இடம் பேசு தேவையில்லாமல் பிரச்சனை பண்ணாதே என முத்துவிடம் கூறிவிடுகிறார்.