சிறகடிக்க ஆசை விஜயாவின் நிஜ கணவர் யார் தெரியுமா.? வைரலாகும் உருக்கமான பதிவு..

siragadikka aasai vijaya

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் நல்ல ரேட்டிங் பிடித்துள்ள சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியல் தான் இந்த சீரியலில் முத்து மற்றும் மீனா இருவரும் தங்களுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து உள்ளார்கள்.

இவர்களின் எதார்த்த நடிப்புக்கே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது இந்த நிலையில் முத்துவுக்கு அம்மாவாக விஜயா  கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அனிதா ஸ்ரீ குமரன் இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார். அதாவது சின்னத்தம்பி, பாவம் கணேசன் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

அதேபோல் தற்பொழுது சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்த வருகிறார் மற்ற இரண்டு பிள்ளைகளை போல் முத்துவை பார்க்காமல் கொஞ்சம் கேவலமாக பார்ப்பார். அதேபோல் இரண்டு மருமகளுக்கும் கொடுக்கும் முன்னுரிமை மீனாவுக்கு கொடுக்க மாட்டார் இப்படி ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தான் விஜயா நடித்து வருகிறார்.

விஜயா கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பு வெளிப்படுத்தி வரும் அனிலா ஸ்ரீ தன்னுடைய கணவர் குறித்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் இவரின் சொந்த ஊர் கேரளா தான் கேரளாவில் இருந்து தமிழில் நடிக்க வரும்போது பயத்தோடு தான் வந்துள்ளார்.

siragadikka aasai
siragadikka aasai

அதற்கு காரணம் தமிழ் அதிகமாக தெரியாதது தான், நம்மளை நடிகையாக ஏற்றுக் கொள்வார்களா என நினைத்து உள்ளார்கள் ஆனால் தமிழக மக்களின் மனதில் மாமியாராகவும் அம்மாவாகவும் நிலைத்து நிற்கிறார் அப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுவரும் ஜோடி சீசன் 10 வது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது அந்த நிகழ்ச்சியில் இவர் பறவையை வைத்து ஆடிய டான்ஸ் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம்.

அந்த வகையில் தன்னுடைய கணவன் குமரனோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விஜயா அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் அது மட்டும் இல்லாமல் அதோடு காதலர் தின வாழ்த்துகளையும் கூறியுள்ளார் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் அவர்களுடனும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

siragadikka aasai