siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதிக்கு கையில் அடிபட்டுள்ளதால் அவருக்கு விஜயா சாப்பாடு ஊட்டி விடுகிறார் மீனா பரிதாபமாக பார்க்கிறார் அதனை கவனித்துக் கொண்டிருந்த பாட்டி விஜயாவை ஊட்றது நிறுத்து எனக் கூறுகிறார் எதற்காக அத்தை என கேட்க மீனா நீ போய் சுருதி பக்கத்தில் உட்காரு என பாட்டி கூறுகிறார் எதுக்கு பாட்டி என கேட்க நீ எதுவும் பேசாம போய் உட்காரு என கூறி விடுகிறார்.
மீனா ஸ்ருதி பக்கத்தில் போய் உட்கார்ந்து இருக்கிறார் உடனே பாட்டி இப்ப எல்லாம் மருமகளுக்கும் நீயே ஊட்டி விடு என கூறுகிறார் எதுக்கு அத்தை இவளுக்கு தான் கையில் அடிபட்டு இருக்கு அவங்க எல்லாம் அவங்களே சாப்பிட்டு இருப்பாங்க எனக் கூறுகிறார் ஆனால் நீ மருமகளுடன் சந்தோஷமாக இருப்பதை பார்க்க வேண்டும் நான் எனக் கூறி அனைவருக்கும் சாதத்தை ஊட்டி விடு என கூறுகிறார்.
விஜயாவும் வேறு வழி இல்லாமல் ஊட்டி விடுகிறார் அப்பொழுது மீனாவுக்கு செவுத்தில் மண்ணறைவது போல் ஊட்டி விட அதனை பார்த்துக் கொண்டிருந்த பாட்டி மீனாவுக்கு மட்டும் ஏன் அப்படி ஊட்டுர என கேள்வி எழுப்புகிறார் வேறு வழியில்லாமல் பிறகு ஒழுங்காக ஊட்டுகிறார். அடுத்த காட்சியில் ரோகினிடம் மனோஜ் நாளைக்கு உங்க மாமா வந்துருவாரு தானே என கேட்கிறார் அவரும் ஆமாம் வந்துவிடுவார் என கூறி விடுகிறார்.
அதேபோல் ஸ்ருதி அந்த முத்து பண்றது சுத்தமா எனக்கு பிடிக்கல நானே கத்தி விட்டுருவேன் ஆனால் வேண்டாம் என்று விடுகிறேன் எனக் கூற அப்படியெல்லாம் எதுவும் செஞ்சுறாத எல்லா சந்தோஷமும் போயிடும் என்பது போல் பேசுகிறார் ரவி. அடுத்த காட்சியில் வீட்டில் அனைவரும் உட்கார்ந்திருக்கும் பொழுது மீனா பூ கட்டிக் கொண்டிருக்கிறார் அதை பார்த்த பாட்டி இப்ப எதுக்கு கற்ற நாளை கட்டிக்கலாம் போய் தூங்கு என கூறுகிறார்.
சொல்லி அடித்த கில்லி.. கேப்டன் மில்லரை வீழ்த்திய அயலான்.. ஏழு நாட்கள் வசூல் விவரம் இதோ..
அதற்கு முத்து பூவை பார்த்தால் விடமாட்டா கட்டிட்டு தான் தூங்குவா என கூறுகிறார் அதற்கு அண்ணாமலை ஒரு விஷயத்தை புடிச்சு செஞ்சா அவ்வளவு சந்தோஷம் என பேசிக் கொண்டிருக்க உடனே பாட்டி என் பேத்திய நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு உனக்கும் பெருமை சேர்த்திருக்கா என விஜயாவிடம் கூறுகிறார் உன் பேர்ல உன் மருமகள் கடையை திறந்து வைத்து உனக்கு பெருமை தேடி தந்து இருக்காங்க என பேச பார்லர் திறந்து இருக்கிறது எனக்கு பெருமை தான் பூக்கடையில் என்னத்த பெருமை என பேசுகிறார்.
உடனே பாட்டிக்கு கோவம் வந்து பூ இல்லாம இந்த உலகத்துல எதுவுமே கிடையாது எல்லாத்துக்கும் பூ தான் தேவைப்படுது என பேசுகிறார். நாளைக்கு காலையில் எழுந்து சீக்கிரமா சமைச்சுரு மீனா ரோகிணி அவங்க மாமா வருகிறார் என கூறுகிறார் அதற்கு பாட்டி கோவப்பட்டு அவ எதுக்கு சமைக்கணும் நீ வேணும்னா சமையல் செய் என பேசுகிறார்.
அடுத்த காட்சியில் புலி வருது புலி வருது என்பது போல் டெய்லி இதே தான் சொல்றீங்க இன்னைக்கும் வேலையை செய்ய விடல என அண்ணாமலை பேசுகிறார் அந்த சமயத்தில் ரோகினி வர நாளைக்கு உங்க மாமா வந்துருவாரா என நேரடியாக ரோகினி இடம் கேட்க கண்டிப்பா வந்துருவாரு என பேசுகிறார்.
வடிவேலுக்கு ஜோடியாக 90 s முன்னணி நடிகையா.! அட்ரா சக்க, அட்ரா சக்க
உடனே ரோகிணி தன்னுடைய தோழியிடம் கால் பண்ணி அந்த ஆள் இன்னும் வரல என்ன ஆச்சுன்னு கேட்டியா எனக் கேட்க கண்டிப்பா நாளைக்கு வந்துருவான் என பேசுகிறார் அடுத்த காட்சியில் மீனா மற்றும் முத்து இருவரும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு நிலா வானம் என கவிதை பேசி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.