சரக்கை ஊத்தி கொடுத்து மலேசியா மாமாவிடம் உண்மையை உருவும் முத்து.! மட்டையாகிக் கிடக்கும் மனோஜ்.! உச்சகட்ட பரபரப்பில் சிறகடிக்க ஆசை.

siragadikka aasai today promo
siragadikka aasai today promo

siragadikka aasai today promo : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மலேசியா மாமாவிடம் அண்ணாமலை ரோகினியின் அப்பா வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் பொண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இல்லையா என கேட்டுக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மலேசியா மாமா அவருக்கும் ஆசை இருக்கிறது அதனால் தான் என்னை போயிட்டு வரச் சொன்னார் என கூறுகிறார்.

இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது மலேசியா மாமா ரோகிணியின் அம்மா கேன்சர் வியாதி வந்து வாந்தி வாந்தியாக ரத்தம் எடுத்து இறந்து விட்டார் என கதை விட்டுக் கொண்டிருக்கிறார் அப்பொழுது உணர்ச்சி வசப்பட்டு ரோகிணி எங்க அம்மா எப்ப இறந்தாங்க என கூறிவிடுகிறார் உடனே அவர் என்னோடு இருப்பது போல் தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என சொல்லி சமாளிக்கிறார்.

சரக்கை ஊத்தி கொடுத்து மலேசியா மாமாவிடம் உண்மையை உருவும் முத்து.! மட்டையாகிக் கிடக்கும் மனோஜ்.! உச்சகட்ட பரபரப்பில் சிறகடிக்க ஆசை.

அடுத்த காட்சியில் ரோகினி இடம் விஜயா நான் அம்மாவாக உனக்கு இருக்கிறேன் நீ எதற்கும் கவலைப்படாதே எனக் கூற பாட்டி இன்னும் இரண்டு மருமகள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் நீ அம்மாவாக இருக்க வேண்டும் அதுதான் அவர்கள் மீது காட்டும் அக்கறை என பேசுகிறார்.

இந்த நிலையில் முத்து மலேசிய மாமாவை எப்படியாவது வெளியே அழைத்து சென்று உண்மையை உருவ வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக இருக்கிறார் அதனால் ஊரை சுத்தி பார்க்கலாம் வாங்க என கூப்பிட மலேசியா மாமாவும் நான் ரெடி போகலாம் என கூறிவிடுகிறார்.

விஜயகாந்த் மரணத்திற்கு வாய் திறக்காத வடிவேலு பவதாரணியின் மறைவிற்கு உடைந்த குரலில் என்ன சொன்னார் தெரியுமா.?

உடனே ரோகிணி மனோஜை உடன் அனுப்பி வைக்கிறார் ஊரை சுற்றி பார்க்க செல்வதுடன் எபிசோட் முடிந்தது இந்த நிலையில் புதிய ப்ரோமோ  வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அப்பொழுது முத்து சரக்கை வாங்கி கொடுத்து மலேசியா மாமாவை கவுக்குறார் அப்பொழுது மலேசியா மாமா இதற்குப் பெயர்தான் விருந்தோம்பல் என கூறிக் கொண்டே குடிக்கிறார்.

அதேபோல் சும்மா நிற்க்கும் மனோஜை அழைத்து மலேசியா மாமா அவர் வாயில் சரக்கை ஊற்றி விடுகிறார் அவர் குடித்துவிட்டு மட்டை ஆகிறார் அப்பொழுது மலேசியா மாமாவிடம் முத்து விசாரிக்க என் பேரு என் ஊரு என சொல்லிக் கொண்டே மலேசியா மாமா மட்டையாகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.

40 வருடத்திற்கு முன்பே ஆனால் பறக்கும் நீதிமன்ற காட்சிகள்..! இன்று வரை மறக்க முடியாத மோகனின் திரைப்படம்.

நாளை எபிசோடில் உண்மையை சொன்னாரா இல்லையா என்பது தெரியவரும்.