ஸ்கெட்ச் போட்டு முத்துவை வெளியே அனுப்பிய ரோகிணி.. ஒரு நாளைக்கு வேலைக்கு போயிட்டு வந்ததுக்கு இந்த அட்டூழியமா மனோஜ்..

siragadikka aasai may 25 episode
siragadikka aasai may 25 episode

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வருகிறார் அப்பொழுது ரோகிணி மனோஜ் இருவரையும் வெளியே நிற்க சொல்லி ஆரத்தி எடுக்க வேண்டும் என விஜயா கூறுகிறார் அதனால் ஆரத்தி எடுத்து வந்து ஆரத்தி சுத்தி விட்டு இருவரையும் உள்ளே வரவழைக்கிறார். உள்ளே வந்த மனோஜ் சோபாவில் படுத்து கொள்கிறார்.

எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு கொஞ்ச நேரம் நான் இங்கேயே படுத்துகிறேன் என சொல்ல அது மட்டும் இல்லாமல் ரவி கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா என ரவியை வேலை வாங்குகிறார் ஏன் நீ போய் குடிக்க வேண்டியது தானே என ரவி கூறுகிறார் ஆனாலும் மனோஜ் ரொம்ப டயர்டா இருக்குடா எடுத்துடு வாடா என பேசுகிறார். தண்ணீரை குடித்துக் கொண்டு அனைவரையும் மனோஜ் பார்க்கிறார்.

மேலும் ரெப்ரஸ் ஆகிவிட்டு வாங்க சாப்பிடலாம் என கூறுகிறார்கள் அதற்கு ரொம்ப டயர்டா இருக்கு கொஞ்ச நேரம் நான் ரெஸ்ட் எடுக்கிறேன் என பேசுகிறார் அப்பொழுது ஒரு நாள் வேலைக்கு போயிட்டு வந்ததற்கு இந்த அலப்பறையா என முத்து கேள்வி கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் அண்ணாமலையும் உன் மகன் இதுதான் உருப்படற லட்சணமா என பேசுகிறார் அண்ணாமலை  அவன் தொழிலதிபருங்க அம்மா வேலை இருக்கும் உங்கள மாதிரி இன்ஜின் டிரைவரா இன்ஜின்ல உக்காந்துகிட்டு இப்படியே போயிட்டு இப்படியே நோகாம வர்றதுக்கு என பேசுகிறார்.

உடனே முத்துவுக்கு கோவம் வருகிறது அப்பா இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட லீவ் போடாம வேலைக்கு போயிட்டு வந்தாரு ஆனா அவருக்கும் இடுப்பு வலி முதுகு வலி கால் வலி எல்லாம் இருக்கும் இதெல்லாம் பொருட்படுத்தாமல் வேலைக்கு போனாரு. இப்படி ஒரே நாளில் வேலைக்கு போயிட்டு வந்து சாய்ந்திடல என பேசுகிறார். உள்ளே சென்ற மனோஜ் படுத்து கொள்கிறார் சாப்பிட கூப்பிடும் வரவில்லை ரொம்ப டயர்டா இருக்கு நான் தூங்குறேன் அப்படியே விட்டுருங்க என பேசுகிறார்.

உடனே முத்து தன்னுடைய அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு பிறகு தூங்கலாம் என ரூமுக்கு செல்கிறார் ஆனால் மனோஜ் அங்கு தூங்கி கொண்டிருக்கிறார் ரோகிணி எவ்வளவு கூப்பிட்டும் வரவில்லை உடனே நாம எதுக்கு இந்த ரூம் விட்டு போகணும் இப்படியே இருக்கலாம் என பேசுகிறார் உடனே முத்து கதவைத் தட்டி வெளியில் வாங்க நாங்க தூங்கணும் என பேசுகிறார் நான் எவ்வளவோ எழுப்பிட்டேன் ஆனா அவரு எந்திரிக்கிற மாதிரி தெரியல என பேசுகிறார் ரோகிணி.

ஆனாலும் முத்து அவன எழுப்பிடு என பேசுகிறார் அதற்கு மீனா வாங்க விடுங்க ஒரு நாள் தானே இருக்கட்டும் என கூப்பிட்டு பார்க்கிறார் முத்துவை அதெல்லாம் முடியாது என முத்துவும் பிடிவாதம் பிடிக்கிறார் முத்து கத்துவது சத்தம் கேட்டு அண்ணாமலை மற்றும் விஜயா வெளிய வருகிறார்கள் அப்பொழுது இன்னைக்கு எங்க டைம் நாங்க தான் உள்ளே தூங்கணும் என பேசுகிறார் முத்து அதற்கு அண்ணாமலை ஆமா சரிதான் என பேச விஜயா அவன் ரொம்ப டயர்டா தூங்கிட்டு இருக்கான் அவனை போய் எழுப்ப சொல்றீங்களே என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அண்ணாமலை இன்னைக்கு நீங்க எங்க ரூம்ல படுத்துக்குங்க நானும் விஜயாவும் வெளியில படுத்துக்கிறோம் என கூறுகிறார் அதற்கு முத்து வேணாம் பா உங்களுக்கு வெளியில ஒத்துக்காது நாங்களே படுத்துகிறோம் என சொல்லிவிட்டு மேலே மாடிக்கு செல்கிறார் அப்பொழுது ரோகினியை பார்த்து முறைத்துக் கொண்டு உங்கள் இஷ்டத்துக்கு  நினைக்கிறீங்க இல்ல இதுக்கெல்லாம் ஒரு முடிவு காலம் வரும் என்பது போல் பேசுகிறார்.

முத்து மேலே சென்று ஃபீல் பண்ணுகிறார், மீனாவிடம் சாரி கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் நமக்குன்னு ஒரு ரூம் கூட இல்ல நமக்குன்னு ஒரு ரூம் இருக்கணும் அதுல நமக்கு பிடிச்ச எல்லாத்தையும் வச்சுக்கணும் என முத்து பீலிங் சாக பேச இது உங்க மூஞ்சிக்கு செட் ஆகல நான் எதையும எதிர்பார்க்கல நீங்க என் கூட இருந்தா போதும் என இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்கள். அடுத்த காட்சியில் அதிகாலை வந்துவிட்டதால் அனைவரும் பரபரப்பாக கிளம்பி கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ரோகிணி மனோஜை எழுப்பி பார்த்துவிட்டு விட்டுவிடுகிறார்.

அப்பொழுது அண்ணாமலை இன்னும் உங்க தொழிலதிபர்  எந்திரிக்கலையா என பேசுகிறார் அதற்கு விஜயா அவன் எப்போவோ எழுந்திருச்சிருப்பன் குளித்திருப்பான் என பேசிக்கொண்டு ரூமுக்குள் செல்கிறார் அப்பொழுது மனோஜ் படுத்து கொண்டிருக்கிறார். குழந்தையை கொஞ்சுவது போல்  எழுப்பிக் கொண்டிருக்கிறார் விஜயா அதை பார்த்த அண்ணாமலை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு கொஞ்சி என பேசுகிறார்.

இப்படி ஆளாளுக்கு எழுப்பி பார்க்கிறார்கள் ஆனால் மனோஜ் எழுந்திருப்பது போல் தெரியவில்லை ஒரு நாளைக்கு வேலைக்கு போனதுக்கே இப்படியா என அனைவரும் பேசுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ரவி எங்க ஓனர் இந்நேரம் கடையை திறந்து எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிருப்பார். எனக் கூறுகிறார் அதற்கு பதிலாக ஸ்ருதியும் எங்க ஓனர் ஆறு மணிக்கே கடையை திறந்துவிடுவார் என பேசுகிறார் இதை கேட்டுக்கு விஜயா அப்போ இவரு இவ்வளவு நேரம் தூங்கினா எப்படி உருப்படுவான் என அண்ணாமலை பேச இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.