Siragadikka Aasai today episode October 9 : இன்றைய எபிசோட்டில் முத்து மீனாவை கூட்டிகிட்டு அவங்க மாமியாரிடம் தாம்பாள தட்டில் பூ பழம் எல்லாம் வைத்து என் தம்பி ரவிக்கு உங்க பொண்ணு சீதாவை கல்யாணம் பண்ணி கொடுங்க அத்தை என்று கேட்க..
என்னோட மூத்த பொண்ணு மீனாவே அங்க வந்து ரொம்ப கஷ்டப்படுறா இப்ப சின்ன பொண்ணையும் அந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிறதா, உங்க அம்மா எங்களை தப்பா பேசுவாங்க அதெல்லாம் சரி வராது மாப்பிள்ளை நீங்க ரவிக்கு வேற இடத்துல பொண்ணு பாருங்க என்று சொல்லிவிட்டார்.
பிறகு முத்துவும் வாங்கிட்டு வந்த பூ பழத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு என் வார்த்தைக்கு இவ்வளவுதான் இந்த வீட்ல மரியாதை இல்ல, நான் சொன்னா நீங்க கேப்பிங்கன்னு நினைச்சு வந்தேன் பரவாயில்லை அத்தை என்று சொல்லி கிளம்பி விட்டார்.. பிறகு போற வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி மீனாவிடம் ரவியும் நல்ல பையன், சீதாவும் நல்ல பொண்ணு ரெண்டு பேரும்..
கல்யாணம் பண்ணா நல்லா இருப்பாங்கன்னு தானே நினைத்தேன் உங்க அம்மா மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிட்டாங்களே என்று கேட்க அம்மா சொன்ன காரணம் சரியா தானே இருக்கு என மீனாவும் சொல்கிறார்.. அடுத்து ஸ்ருதி அவங்க அப்பா அம்மாவிடம் எனக்கு இப்ப கல்யாணம் வேணாம் கொஞ்ச நாள் தள்ளி போடுங்க அப்புறம் நானே சொல்றேன் என்று கேட்க..
அதெல்லாம் நீ சொல்றத கேட்க முடியாது கொஞ்ச நாள் தள்ளிப் போட்டா நீ நெனச்சத செய்து முடிக்க தானே, உனக்கு விச்சு கூட தான் கல்யாணம், நாளைக்கு விச்சு வீட்டுக்கு வருவார் அவர் கூட ஷாப்பிங் போயிட்டு வா என்று சொல்கின்றனர்.. பிறகு ரவி ரெஸ்டாரண்டுக்கு கிளம்பும்போது முத்து ஒழுங்கா ரெஸ்டாரண்டுக்கு போய் வேலையை பாரு, அந்த பொண்ணு கூட எல்லாம் பேசுற வேலை வச்சுக்காத என்று சொல்லும் பொழுது ஸ்ருதி ரவிக்கு போன் பண்ணுகிறார் ஆனால் ரவி அந்த போனை அட்டென்ட் செய்யவில்லை..
அதனால் ஸ்ருதி ரவி வேலை பார்க்கும் ரெஸ்டாரண்ட் வந்துள்ளார்.. ரவியிடம் நீ என்ன நெனச்சிட்டு இருக்க, என்ன அந்த மாப்பிள்ளை பையன் கூட நாளைக்கு பர்ச்சேஸ்க்கு போக சொல்றாங்க, நீ போன் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டேங்குற, என்னோட மெசேஜ்க்கும் ரிப்ளை பண்ணல எனக்கு ஒரு பதில் தெரியிற வரைக்கும் நான் இங்கதான் இருப்பேன், என்று ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து விட்டார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..