Siragadikka Aasai today episode October 25 : இன்றைய எபிசோடில் சீதா உடைய அம்மா உனக்கு இந்த திருட்டு புத்தி எங்கிருந்து வந்தது இதுக்கு தான் அவன் கூட பேசிட்டு இருந்தியா.. இப்ப உன்னால அக்கா வாழ்க்கை கேள்விக்குறியா ஆயிடுச்சே என்று அடித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மீனாவும் ஓடி வந்து அம்மா நான் எந்த தப்புமே பண்ணல..
ஆனா என் மேல பழி வந்துடுச்சு என்னை வீட்டை விட்டு போக சொல்லிட்டாங்க எல்லோரும் என்று அழுது கொண்டிருக்கிறார்.. ரவி என்னை பொய் சொல்லி கோவிலுக்கு அழைச்சிட்டு போயிட்டாரு, அங்கு எல்லோரும் சொன்னதால வேற வழி இல்லாம சாட்சி கையெழுத்து போட்டேன், ஆனா திரும்பி வந்து உண்மைய சொல்லுவாருன்னு நினைச்ச..
விக்ரம் நடிப்பில் வெளியானது துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்.!
இப்படி பண்ணிட்டாரு என்று சொல்ல மீனாவுடைய அம்மா நீ வீட்டுக்கு போய் உன் பக்கத்துல உள்ள உண்மைய சொல்லு உன்ன புரிஞ்சிப்பாங்க இங்க இருந்தா பிரச்சனை பெரிசாயிடும் என்று மீனாவுடைய அம்மாவும் அவங்க வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை.. அதனால் மீனா முத்து வீட்டுக்கே திரும்பி செல்கிறார்.
பிறகு ஸ்ருதி ஃபர்ஸ்ட் நைட்காக ஸ்வீட் பூவெல்லாம் வாங்கி வைத்துவிட்டு ரவியிடம் கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம பெற்றோர்கள் சேர்ந்து செய்ய வேண்டிய சடங்கு ஆனா அவங்களுக்கு நம்ம மேல அக்கறை இல்ல அதனால நம்மளே ஏற்பாடு பண்ணிக்கலாம்னு தான் செஞ்சேன் என்று சொல்ல ரவி எங்க வீட்ல இப்ப என்ன நிலைமைன்னு தெரியல..
thalapathy 68 : மங்காத்தாவை தொடர்ந்து தளபதி 68 லும் தனது கேங்கை களமிறக்கும் வெங்கட் பிரபு.!
நம்மளால அண்ணிக்கு தான் பிரச்சனை வந்துச்சு ஏற்கனவே எங்க அம்மா அண்ணிய ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க இப்ப அண்ணிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல இந்த நேரத்துல நமக்கு ஃபர்ஸ்ட் நைட் வேண்டாம் என்று சொல்கிறார்.. அடுத்து விச்சுவும் காளிதாசனும் வாசுதேவன் வீட்டிற்கு வந்து என்னை ஏமாத்திட்ட இல்ல என் பையன வச்சு உன் பொண்ணு ஓடிப் போய் இருக்கா..
இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு. இதனால எனக்கு எவ்வளவு ப்ராப்ளம் தெரியுமா, உன் பொண்ணு வேற ஒரு பையன லவ் பண்றாங்குறது உனக்கு ஏற்கனவே தெரியும் தானே ஏன் என்கிட்ட இருந்து மறைச்ச உன்னால எனக்கு என் பிசினஸ்ல எவ்வளவு லாஸ் ஆக போது தெரியுமா என்று கோபமாக கத்திக் கொண்டிருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..