சாட்சி கையெழுத்து போட்டுட்டு இங்க வந்து நிக்கிற.. முத்துவின் கோபத்திற்கு ஆளாகும் மீனா

Siragadikka Aasai today episode october 20
Siragadikka Aasai today episode october 20

Siragadikka Aasai today episode October 20 : இன்றைய எபிசோடில் ஸ்ருதியை காணும் என்று வாசுதேவன், சுதா போலீஸில் கம்பிளைன்ட் கொடுத்துவிட்டு அண்ணாமலை வீட்டிற்கு வந்து என் பொண்ண உன் பையன வச்சு நீ தான் கடத்தி இருப்ப என அண்ணாமலை சட்டையை பிடிக்க பிறகு போலீஸ் அண்ணாமலையை ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அப்பொழுது வீட்டிற்கு ஆட்டோவில் வரும் மீனாவும் மாமாவை பார்த்துவிட்டு ஸ்டேஷனுக்கு வருகிறார்.. ஸ்டேஷனில் போலீஸ் அண்ணாமலை இடம் உன் பையன் வர வரையும் உன்னை விடமாட்டோம் என்று லாக்கப்பில் தள்ளி உள்ளனர்.. பிறகு கான்ஸ்டபிள் இடம் இவங்க பொண்ணு போன கோவிலுக்கு போய் விசாரிச்சுட்டு வா என போலீஸ் சொல்லி அனுப்புகிறார்.

சூர்யாவின் விக்னஸ் பார்த்து அடிக்கும் சித்ரா தேவி.. மகா தடுப்பாரா.? பரபரப்பான கட்டத்தில் ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

மீனா முத்துக்கு போன் பண்ணி மாமாவ போலீஸ் புடிச்சிட்டு போயிடுச்சு ரவி கோவில்ல என்று சொல்லும்போது சிக்னல் கிடைக்காமல் போன் கட் ஆகி விடுகிறது அதனால் முத்துவும் பதறிப் போய் ஸ்டேஷனுக்கு வருகிறார்.. அடுத்து ரோகிணி வித்யாவிடம் உனக்கு தெரிந்த லாயர் இருக்காங்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சீதாவும் ஸ்டேஷனுக்கு வற சீதாவிடம் மீனா உன்னால இப்ப எவ்வளவு பிரச்சனை பார்த்தியா மாமா கூனிக்குறுகி ஸ்டேஷன் ல உக்காந்து இருக்காரு என வருத்தப்படுகிறார். அப்போது கோவிலுக்கு போன கான்ஸ்டபிள் ஸ்டேஷனுக்கு வந்து காலையிலேயே ஸ்ருதி ரவிக்கு கல்யாணம் நடந்து இருக்கு என்று சொல்கிறார்.

leo day 1 collection : முதல் நாள் வசூலில் ரெக்கார்ட் பிரேக் செய்த லியோ.! மொத்தம் எத்தனை கோடி தெரியுமா.

அடுத்து போலீஸ் இதுல யாரு மீனா என்று கேட்க நான் தான் என மீனா செல்கிறார். இவங்க தான் சாட்சி கையெழுத்து போட்டு இருக்காங்க என சொல்ல எல்லோரும் ஷாக் ஆகி நிற்கின்றனர் முத்துவால் இதனை நம்ப முடியவில்லை இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..