சீதா எடுத்த முடிவால் மீனாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகுமா.? பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode october 14
Siragadikka Aasai today episode october 14

Siragadikka Aasai today episode October 14 : இன்றைய எபிசோடில் வாசுதேவன் அண்ணாமலை இடம் என் பொண்ணுக்கு வேற இடத்துல கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்கேன் உன் பையன கண்டுச்சு வச்சுக்கோ என் பொண்ணு கூட பேசக்கூடாது என வான் பண்ணுகிறார் என் பையன் ரவியை பத்தி எனக்கு தெரியும் அவன நான் பொறுப்பா வளர்த்து இருக்கேன் அதனால உங்க பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று சொல்கிறார்.

பிறகு அண்ணாமலை வீட்டுக்கு போய் முத்துவை கூப்பிட்டு வாசுதேவன் என்ன பார்த்து பேசினாரு அவரோட பொண்ணு கூட ரவி பேசிட்டு இருக்கானா, நானும் ரவி கிட்ட ஒரு தடவை கேட்டேன் பிரென்ட் தான்னு சொன்னா இருந்தாலும் நீ இதை பற்றி ரவி கிட்ட பேசு என்று முத்துவிடம் சொல்கிறார்.. இதைக் கேட்டு முத்து சரி நான் ரவி கிட்ட பேசுறேன் என்று சொல்கிறார்.

அடுத்து ரவி சீதாவுக்கு போன் பண்ணி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்னோட லவ் பத்தி நேர்ல மீட் பண்ணலாம் வா என்று ஒரு இடத்திற்கு சீதாவை வரச்சொல்லி ரவி சீதாவிடம் நான் என்னோட காதலை பற்றி உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கணும் என்று சொல்ல சீதா உடனே நம்மள தான் லவ் பண்றாரா என்று சந்தேகப்படுகிறார்.. பிறகு நானும் ஸ்ருதியும் கொஞ்ச நாளா லவ் பண்றோம். இப்ப அவங்க வீட்ல பிரச்சனை ஆயிடுச்சு..

அதனால நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும் நாங்க வீட்டுக்கு தெரியாம மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம் என்று சொல்ல வீட்ல எல்லாரும் ரொம்ப கஷ்டப்படுவாங்க நான் முத்து மாமா கிட்ட பேசி பார்க்கிறேன்.. உங்க லவுக்கு என்னால எல்லாம் ஹெல்ப் பண்ண முடியாது எனக்கு பயமாயிருக்கு இதனால் அக்கா வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சனை வந்துரும் என சீதா பயப்படுகிறார்.

\ஆனால் ரவி எந்த பிரச்சனையும் வராது அப்படியே பிரச்சனை வந்தாலும் என் மேல பழியை போட்டுக்கிறேன் என்று சொல்கிறார் அப்பொழுது ஸ்ருதியும் போன் பண்ணி சீதாவிடம் எங்களவுக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் என்று உதவி கேட்கிறார்.

பிறகு ஸ்ருதி என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட் என்று சொல்லிவிட்டு என்னோட வீட்டுக்கு வா என்று கூப்பிட சீதாவும் ஸ்ருதி வீட்டுக்கு போகிறார் அங்கு அவங்க அப்பா அம்மா நீங்க யார் என்று கேட்க நான் ஸ்ருதியோட ஸ்கூல் பிரண்ட் என்று சொல்வதும் ஸ்ருதியை கீழே கூப்பிடுகின்றனர் சீதா பயத்தில் நிற்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..