Siragadikka Aasai today episode October 11 : இன்றைய எபிசோடில் ரோகினி உடைய அம்மா மற்றும் மகனிடம் முத்து மற்றும் மீனா இருவரும் வீட்டு உள்ள வாங்க டீ குடிச்சிட்டு போகலாம் என்று கேட்க லட்சுமி பஸ்சுக்கு நேரம் ஆகுது நாங்க போகணும் என்று சொல்கிறார் பிறகு சரி என் நம்பர் எழுதி வச்சுக்கோங்க வீட்டுக்கு போனதும்..
போன் பண்ணுங்க என்று சொல்லி மீனா ஒரு பேப்பரில் அவருடைய நம்பர் எழுதி கொடுக்கிறார்.. பிறகு வித்யாவும் ரோகிணியும் ரூமுக்கு வந்து இந்த மீனா என்ன விட அதிகமா கிருஷ் கிட்ட பாசத்தை காமிக்கிறார். இப்படி பாசத்தை காமிச்சே உண்மையெல்லாம் வாங்கிடுவா போல..
இன்னொரு தடவை அவங்க இந்த ஊருக்கு வந்தா கண்டிப்பா நான் மாட்டிடுவேன் என்று சொல்கிறார் உடனே வித்யா இதற்கு தான் சொன்னேன் மனோஜ கூட்டிட்டு தனி குடுத்தனம் போயிடு என்று நீ தான் கேக்க மாட்டேங்குற என்கிறார். பிறகு விஜயா ரூம்க்கு வந்து எனக்கு பார்வதி கிடைச்ச மாதிரி உனக்கு வித்யா நல்ல பிரண்ட் கிடைச்சிருக்கா என்று சொல்கிறார்.
அடுத்து ரவி ஸ்ருதி இடம் ரெஸ்டாரண்டை மூட போறாங்க வீட்டுக்கு கிளம்பு என்று சொல்கிறார்.. சுருதியும் நாளைக்கு ஒரு நாள் உனக்கு டைம் தர அதுக்குள்ள யோசிச்சு நல்ல முடிவா சொல்லு இல்லன்னா நான் எடுக்கிற முடிவே வேற மாதிரி இருக்கும் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு போகிறார்.
வீட்டுக்கு போயும் இரவு ரவிக்கு அடிக்கடி ஃபோன் பண்ணுகிறார் ஆனால் ரவி போனை அட்டென்ட் செய்யாமல் அப்பா அவங்க வீட்டு சவகாசமான நமக்கு வேணாம்னு சொன்னதை நினைத்துப் பார்க்கிறார்.. அடுத்த நாள் காலையில் விச்சு சுருதி கூட ஷாப்பிங் போக வாசுதேவன் வீட்டிற்கு வந்து ஸ்ருதியை காரில் அழைத்துக் கொண்டு போகிறார்..
அப்பொழுது சுருதி ரவிக்கு லொகேஷனை ஷேர் பண்ணுகிறார் பிறகு ஸ்ருதியும் விஜியும் ஷாப்பிங் போன இடத்தில் லிப்டில் இருவரும் செல்லும் பொழுது ரவியும் உள்ளே வருகிறார் இதைப் பார்த்து ஸ்ருதி ரொம்ப சந்தோஷப்படுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.