மருமககளை வீட்டுக்கு அழைக்க வந்த விஜயா.. கால் மேல் கால் போட்டு தெனாவட்டாக உட்கார்ந்திருந்த ஸ்ருதி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode November 29
Siragadikka Aasai today episode November 29

Siragadikka Aasai today episode november 29 : இன்றைய எபிசோடில் மீனா வாசுதேவன் மற்றும் சுதாவிடம் சென்று உங்க பொண்ணு லைஃப்க்கு பாதுகாப்பு இல்லை.. நீங்க கல்யாணம் பண்ணி பாக்க வைத்த பையன் இன்னைக்கு ஆசிட் ஊத்த வந்துட்டான் தனக்கு ஒரு பொண்ணு கிடைக்கலன்னா அந்த பொண்ணு நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிற அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தீங்க..

இப்ப ரவியும், ஸ்ருதியும் நல்லாதான் இருக்காங்க நீங்க போய் உங்க பொண்ண பாருங்க என்று சொல்லிவிட்டு மீனா சொல்கிறார்.. முத்துவும் செல்வமும் சவாரிக்காக ஒரு இடத்திற்கு சென்று இருக்கிறார்.. அங்கு மீனா வந்து இன்னைக்கு ஒரு விஷயம் நடந்தது அது உங்க கிட்ட சொல்லணும் என்று ஸ்ருதி சொல்ல..

இன்று இரவு நீதான்.. படுக்கைக்கு அழைத்த இயக்குனர் இவர்தான்…! பெயருடன் தில்லாக கூடிய ஷகீலா.

மீனா என்ன போன் பண்ணி வர சொன்னாங்க அதனால நான் போன அங்க ஒரு பையன் அவங்க மேல ஆசிட் உத்த வந்தாங்க நான் தான் காப்பாத்துனேன் என்று சொல்ல முத்து உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன பண்றது என மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது மீடியாகாரங்கள் வந்து மீனாவிடம் கிட்ட பேட்டி எடுக்கணும் என்று சொல்ல முத்து இவ என்ன சாதனை பண்ணா பேட்டி எடுக்க என்பதும் பிறகு ஒரு பொண்ணு மேல ஆசிட் உத்த வந்தப்ப அவனை கல்லாலையே அடிச்சு விரட்டி இருக்காங்க அங்கு அவ்வளவு ஆம்பளைங்க இருந்தும் இவங்க தைரியமா செஞ்சிருக்காங்க என்று அந்த வீடியோவை முத்துவிடம் காண்பிக்கின்றனர்.

மீண்டும் போலீஸ் வேடத்தில் மிரட்டும் விஜய் ஆண்டனி.! வெளியானது வள்ளி மயில் பட டீசர்..

பிறகு மீனா நான் என்ன பெருசா செஞ்சுட்டேன், அதுவும் என் புருஷன் இப்படித்தான் ஒரு சண்டைன்னா முன்னாடி நிப்பாரு அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் இந்த தைரியம் எனக்கு வந்தது என்று முத்துவைக் காண்பிக்கிறார் பிறகு முத்துவும் என் பொண்டாட்டி ரொம்ப திறமைசாலி தான் என்று பேட்டி கொடுக்கிறார்..

அடுத்து பார்வதி விஜயா வீட்டிற்கு வந்து உன் மருமக சாதனை பண்ணி இருக்கா என்று மீனாவுடைய வீடியோவை காண்பித்து இதுதான் நல்ல நேரம் இப்ப போய் ஸ்ருதி கிட்ட நீங்க தனியா இருக்கிறதால் தானே இவ்வளவு பிரச்சனை நம்ம வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடலாம் என்று சொல்ல பார்வதியும் விஜயாவும் ரவி வீட்டிற்கு போகின்றனர்.

அங்கு ரவி அம்மாவை பார்த்து உடனே ஸ்ருதி அம்மா வந்திருக்காங்க வா என்று கூப்பிட சுருதியும் வாங்க ஆன்ட்டி என்று ரவியை டீ போட சொல்கிறார் பிறகு அவங்க அம்மா முன்னாடி ஸ்ருதி கால் மேல் கால் போட்டு உட்காருங்க அதை பார்த்து ரவி காலை இறக்கு என்று மெசேஜ் பண்ணி அனுப்புகிறார்.

அதை பார்த்துவிட்டு பிறகு ஸ்ருதி காலை இறக்குகிறார்.. அடுத்து நீங்க ஏன் தனியா இருக்கணும் நம்ம வீட்டுக்கு வாங்க என்று விஜயா ஸ்ருதியை கூப்பிட எனக்கு இப்ப அங்க வர ஐடியா இல்லை அதுவும் முத்து இருக்கிற வீட்டுக்கு என்னால வர முடியாது.

அவர் ஏற்கனவே என்ன இன்சல்ட் பண்ணி இருக்காரு அது மாதிரி என்னை யாருமே பேசினதில்லை.. நீங்க ரொம்ப ஸ்வீட்டா பேசுறீங்க உங்களுக்காக வேணும்னா நான் வீட்டுக்கு வரத பத்தி யோசிக்கிறேன் என்று ஸ்ருதி சொல்கிறார் இதோட எபிசோடு முடிந்துள்ளது.