Siragadikka Aasai today episode November 06 : இன்றைய எபிசோடில் மீனா சாப்பிடுவதற்கு பூரி சமைத்து வைத்திருக்கிறார் இதை பார்த்து ரோகினி எண்ணெய் பொருள் எல்லாம் சாப்பிட்டதால் தான் மாமாவுக்கு இப்படி ஆயிடுச்சு என்று சொல்ல நான் மாமாவுக்கு தனியா கஞ்சி ரெடி பண்ணி வச்சிருக்கேன்..
என் புருஷனுக்கு பிடிக்கும் என்பதால் பூரி செஞ்சேன்னு சொல்கிறார். பிறகு விஜயா எங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு செய்ய மாட்டியா என்று கேட்க அண்ணாமலை இது என்ன ஹோட்டலா ஒவ்வொருத்தவங்க கிட்டயும் ஆர்டர் எடுத்து செய்ய.. இருக்கிறத சாப்பிடு என்று சொல்கிறார்.
யோ செவனாண்டி நீ பெத்த மவள இது.! லதா பாண்டியனைப் பார்த்து உருகும் ரசிகர்கள்.?
உடனே விஜயா இவ வேணும்னே இப்படி பண்றா எண்ணெய் ஃபுல்லா சாப்பிட்டு நான் இன்னும் குண்டாகி எனக்கு நெஞ்சுவலி வரணும்னு பண்றா என மீனாவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது முத்து அங்கு வருகிறார் அண்ணாமலை முத்துவை சாப்பிட சொல்ல எனக்கு நேத்து வரையும் பூரி பிடிச்சது இனிமே எனக்கு பிடிக்காது.
நான் வெளியில் சாப்பிட்டுக்கிறேன் என்று சொல்கிறார் மீண்டும் அப்பா சொல்வதால் முத்து சாப்பிட உட்காருகிறார் ஆனால் அப்பொழுது விஜயா இவ பண்ண காரியத்தை எப்படி அவன் மறப்பான், இவளால தானே ஒன்னோட அப்பா ஸ்டேஷனுக்கு போனாரு, நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடல் போனது எல்லாம் என்று திரும்ப ஞாபகப்படுத்த உடனே முத்துவிற்கு கோபம் வந்து எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கிளம்பி விட்டார்.
Amala paul marriage : காதலரை கரம் பிடித்த அமலாபால்.! வைரலாகும் திருமண புகைப்படம்..
அடுத்து மனோஜ் சாப்பிட வருகிறார் அப்பொழுது ரோகினி காலையிலே எண்ணெய் பொருள் எல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு நான் உன்கிட்ட சொல்லி இருக்கேன் இல்ல நான் ஏபிசி ஜூஸ் போட்டு தரேன் வாங்க என்று மனோஜையும் விஜயாவையும் கூட்டிக்கிட்டு போகிறார்.. அடுத்து முத்து கார் ஸ்டாண்டில் சவாரி இல்லாமல் உட்கார்ந்திருக்கிறார்.
அப்பொழுது செல்வத்திடம் என்னோட கார் கைமிரி போயிடுச்சு, சவாரி ஒன்னும் வரல, பைனான்ஸ் காரன் போன் பண்ணிக்கிட்டு இருக்கான் பணம் கட்டணும் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கும்போது முத்து உடைய காரை வாங்குனவர் அங்கு வந்து இப்ப அப்பா எப்படி இருக்காரு என்று கேட்டு விட்டு காருடைய புக்கு தரேன்னு சொன்னீங்களே என கேட்க..
உடனே முத்து காருடைய புக்கை எல்லாம் எடுத்துட்டு வந்து அவரிடம் கொடுக்க பிறகு அவர் ஒரு சைன் பண்ணுங்க என்று சொல்கிறார்.. முத்து தன்னுடைய காரை எமோஷனலாக பார்த்துவிட்டு சைன் போட்டு அவரிடம் கொடுத்துவிட்டு என் கார ஒரே ஒரு தடவை நான் ஓட்டி பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த காரை ஓட்டி பார்த்துவிட்டு பிறகு அவரிடம் கொடுத்து விட்டார்.
அடுத்து இரவு முத்து வீட்டிற்கு குடித்துவிட்டு வருகிறார் மீனா சாப்பிடுங்க என்று சொல்ல எனக்கு சாப்பாடு எல்லாம் வேண்டாம்.. நீ பண்ணத நான் மறக்கவே மாட்டேன் உன்னால தான் என் கார் போச்சு அப்பாவுக்கு இப்படி ஆனது எல்லாம் என்று மீண்டும் மீனாவிடம் கோபப்படுகிறார் இதோட எபிசோட் முடிந்துள்ளது..