மீனா செய்த காரியத்தால் சிட்டியை சுளுக்கு எடுக்க போகும் முத்து.. கண்ணீர் விட்டு கதறி அழும் அண்ணாமலை..

siragadikka aasai may 9
siragadikka aasai may 9

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா தன்னுடைய கணவன் முத்து மீது எந்த தவறும் கிடையாது என புரிந்து கொண்டு ஒயின்ஷாப்பிற்கு செல்கிறார் அங்கு ஒருவர் மீனாவை தவறாக வீடியோ எடுக்கிறார் உடனே அவரை கன்னத்தில் அறைந்து என் புருஷன் ரெண்டு நாளைக்கு முன்னாடி குடிச்சதா ஒரு வீடியோ வந்துட்டு இருக்கு ஆனா அவர் குடிக்கல அத நிரூபிக்க தான் இங்க வந்து இருக்கேன் என கூறுகிறார் இதனால் அங்கு இருப்பவர்கள் மீனாவுக்காக வருத்தப்படுகிறார்கள்.

ஒயின் ஷாப் ஓனர் வந்தவுடன் அவரிடம் உங்க பொண்ணா நினைச்சு எனக்கு ஹெல்ப் பண்ணுங்க இந்த சிசிடிவி காட்சி பார்த்தால் தான் என் புருஷன காப்பாத்த முடியும் என கூறுகிறார் உடனே அவர் சிசிடிவி காட்சியை காண்பிக்க சொல்கிறார் மீனா அந்த சிசிடிவி காட்சியை பார்த்து விடுகிறார் அதில் சிட்டி வீடியோ எடுப்பதும் முத்து குடிக்காமல் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே அந்த வீடியோவை ரவிக்கு அனுப்ப சொல்கிறார்கள்.

உடனே ரவி முத்து இருக்கும் இடத்திற்கு கிளம்பி வருகிறார் முத்து விடம் ரவி பேசிக் கொண்டிருக்கிறார் நீ எதற்கு ரவி இங்கு வந்தாய் என முத்து கேட்க மீனா அண்ணி தான் வர சொன்னாங்க என கூறுகிறார் மீனா இவ்வளவு எபோட் போட்டு நிரூபிப்பாங்கன்னு நா நனைச்சு கூட பார்க்கலா என பேசுகிறார் ஆனால் இதற்கு முன்பு முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அங்கு நான் குடிக்கவில்லை என எவ்வளவோ சொல்லி பார்க்கிறார் ஆனால் அந்த போலீஸ் நம்புவது போல் தெரியவில்லை கோர்ட்டில் பைன் கட்டி விட்டு வாங்கிக் கொள் என பேசுகிறார்.

மீனா வந்தவுடன் முத்துவை கட்டிபிடித்து நான் கூட உங்களை நம்பல எனக்கு கஷ்டமா இருக்கு என அழுது கொண்டு பேசுகிறார் உடனே முத்து நான் எவ்வளவோ அன்னைக்கு சொன்ன யாருமே நம்பல இப்பயாவது நீ நம்புறியே என பேசுகிறார் ஆனால் இப்ப மட்டும் எப்படி நம்புறீங்க என கேட்க உடனே ரவி அண்ணி ஒயின்ஷாப்புக்கு சென்று சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்து விட்டு எனக்கு அனுப்பியுள்ளார்கள் என அந்த வீடியோவை காட்டுகிறார் உடனே ரவி மற்றும் மீனா மறுபடியும் நீ பேசு அப்ப வீடியோவை அனுப்பி அனைவருக்கும் புரிய வைப்போம் என கூறுகிறார்.

உடனே முத்து பேசுகிறார் ரவி வீடியோ எடுக்கிறார் அப்பொழுது இப்படி எந்த வீடியோ வந்தாலும் உடனே ஷேர் பண்றிங்களே அது உண்மையா இல்லையான்னு தெரிஞ்சுக்க மாட்டீங்களா என பேசுகிறார் இப்படி பேசிக் கொண்டிருக்க மீனாவையும் பெருமையாக பேசுகிறார் முத்து இந்த வீடியோவை மீனாவின் அம்மா பார்க்கிறார் அவர் கண்ணீர் விட்டு அழுகிறார் அதுமட்டுமில்லாமல் அண்ணாமலை இந்த வீடியோவை பார்த்து என் பையனை நானே தப்பா நினைச்சுட்டேனே கண்ணீர் விட்டு அழுகிறார்.

அடுத்த நாள் வீடியோவை டிவியில் போட்டு காட்டி இப்ப பாருங்கடா என் புள்ள தப்பு பண்ணல என அண்ணாமலை சத்தம் போட்டு  சொல்லுகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.