விஜயா கண்கலங்கியதால் முத்து செய்த வேலை..! அந்தர் பல்டி அடித்த ரோகினி.. கடைசிவரை அம்மாவுக்காக பிடிக்கொடுக்காத மனோஜ்..

siragadikka aasai april 30
siragadikka aasai april 30

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மற்றும் மீனவை ரூமில் தூங்க சொல்லிவிட்டார்கள் அதனால் இருவரும் தூங்க   செல்வதற்கு முன்பு மனோஜ் ரோகினி உள்ளே இருக்கிறார்கள் உடனே கதவை தட்டி வெளியே வர சொல்கிறார் முத்து அப்பொழுது இதோ வந்து விட்டேன் என மனோஜ் ஓவராக பேச முத்து மற்றும் மீனா   ரூமுக்கு சென்று கதவை சாத்துகிறார். உடனே மனோஜ் எப்படியாவது இவர்களை தூங்க விடக்கூடாது என கதவை தட்டி சார்ஜர் இருக்கிறது பெட்ஷீட் இருக்கிறது தலையணை இருக்கிறது என டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறான்.

உடனே முத்து எல்லாத்தையும் பெட்ஷீட் உள்ளே போட்டு அனைத்து பொருளையும் மூட்டை கட்டி கொடுத்து விடுகிறார். இதுக்கு மேல கதவை தட்டினா கையை உடைத்துவிடுவேன் என கூறுகிறார் மனோஜ் இங்கு வெக்கையா இருக்கு நான் எப்படி இங்க தூங்குவேன்னு பேசிக் கொண்டிருக்கிறார் ஆனால் ஒரு வாரம் தன அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என பேசுகிறார் கண்டிப்பா அடுத்த வாரம் இதுக்கு ஒரு முடிவு காலம் பிறக்கும் எனவும் பேசுகிறார்.

ஏனென்றால் ஸ்ருதி வசதியான பெண் அவர் எப்படி இங்கே தூங்குவாள் என இருவரும் பேசிக் கொண்டிருக்க மனோஜ் தூக்கம் வராமல் உலாவிக் கொண்டிருக்கிறார்.உடனே தன்னுடைய அம்மா வந்தவுடன் என்னால் இங்கு தூங்க முடியவில்லை என மனோஜ் கூற நானம் ்க அப்பாவும் இங்கான் படுத்து இருந்தோம் அப்போ எங்கள பத்தி கொஞ்சம் கூட நினைக்கலையே நீ என பேசுகிறார்.

அது மட்டும் இல்லாமல் ஒரு வாரம் அமைதியாக இரு எல்லாத்துக்கும் ஒரு வழி பிறக்கும் எனவும் விஜயா கூறுகிறார் அதேபோல் மீனா தரையில் படுக்க பாயை விரித்து போட நம்ம கட்டில் தானே படுக்கணும் எதற்கு கீழே பாய் போடுகிறாய் என பேசுகிறார் அதற்கு மீனா இது நமக்காண இடம் கிடையாது நான் கீழ படுத்தே பழகிட்டேன் நான் கீழே படுத்துகிறேன் என பேச உடனே முத்துவும் நானும் உன் கூடவே படுத்துகிறோம் என கீழே படுத்து கொள்கிறார்.

அடுத்த நாள் அனைவரும் சாப்பிட உட்காரும்போது கடை வேலை முடிந்து விட்டதா என அண்ணாமலை கேட்கிறார் அதற்கு மனோஜ் ஓரளவு முடிந்து விட்டது கடையை ஓபன் பண்ண சில சினிமா பிரபலங்களை பார்க்க போகிறோம் என பேசிக்கொண்டு இருக்கிறார். அப்பொழுது விஜயா வருகிறார். விஜயா வந்தவுடன் விஜயா முகத்தில் சோகம் தெரிகிறது ஏனென்றால் கடையை என்னை வைத்து ஒப்பன் செய்யவில்லையே என வருத்தப்படுகிறார்கள் இதனை பார்த்து முத்து புரிந்து கொண்டு விஜயாவுக்கு ஆதரவாக பேச ஆரம்பிக்கிறார்.

சினிமா பிரபலத்தை  வைத்து ஓபன் பண்ணினால் ஃப்ரீயாக ஓப்பன் பண்ண மாட்டார்கள் காசு கொடுக்க வேண்டும் எதற்காக அந்த காசை செலவு செய்ய வேண்டும் அதை பிசினஸில் இன்வெஸ்ட் செய்யலாம் என அண்ணாமலையும் கூறுகிறார். அதற்கு மனோஜ் இது பிசினஸ் ட்ரிக்ஸ் அவங்கள வச்சு ஓபன் பண்ணா நம்ம பிரபலம் ஆகி விடலாம் என  பேசுகிறார்.

ஆனாலும் முத்து  பாட்டி இருக்காங்க அம்மாவை வைத்து கடையை ஓபன் பண்ணலாம் அல்லது அப்பாவை வைத்து ஓபன் பண்ணலாம் என பேசுகிறார் உடனே அண்ணாமலை அவனுக்கும் தோன்றாத எதையும் நான் சொல்ல கூடாது என ஒரேடியா கூறி வார்த்தையை முடிக்கிறார். ரவியும் அம்மாவை வச்சு ஓபன் பண்ணலாம் இல்ல வீட்ல இருக்கறவங்களை வைத்து ஓபன் பண்ணலாம் நல்ல விஷயம் தானே என பேசுகிறார் அப்பொழுது முத்து நீ என்ன பண்ணி பண்ணாலும் உனக்கு சப்போர்ட் பண்றது அம்மா தானே அவங்கள வச்சு ஓபன் பண்ணலாமே என பேசுகிறார்.

அதேபோல் அண்ணாமலையும் அதேயே கூறுகிறார் உடனே ரோகிணி அந்தர் பல்டி அடித்து அத்தையை வைத்து ஓபன் பண்ணலாம் என கூறுகிறார் இதனால் விஜயா சந்தோஷப்படுகிறார் அதனை பார்த்து முத்துவும் சந்தோஷப்படுகிறார். இப்படியே பேசிக்கொண்டிருக்க மனோஜ் பிடி கொடுக்காமல் அது சரி வருமானு தெரியல ஆனாலும் அப்படின்னு இரழுக்க  உடனே நீ அம்மாவ வச்சு ஓபன் பண்ணு இப்ப பாரு அவ மூஞ்சில தவுசன் வாட்ச் பல்பு மதிி எவ்வளவு பிரகாசமா ருக்கு என்ன பேசுகிறார்.

ஒரு வழியாக விஜயாவை வைத்து ஓப்பன் பண்ண அனைவரும் சம்மதிக்கிறார்கள் இத்துடன் இந்த எபிசோடு முடிகிறது.