சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி ஸ்ருதி நைட்டியை போட்டுக் கொண்டு நிற்கிறார். அப்பொழுது சுருதியின் மேல் உனக்கு காதல் இருந்தால் இங்கிருந்து சென்று டீ போட்டுக் கொண்டு வா என பெட் கட்டுகிறார் அப்பொழுது இவ்வளவுதானா போட்டுக் கொண்டு வருகிறேன் என கிச்சனுக்கு செல்கிறார் அப்பொழுது அங்கு டீ போட்டுக் கொண்டிருக்கும் பொழுது ரோகிணி வருகிறார் தண்ணீர் பிடித்து விட்டு செல்கிறார் அப்பொழுது ரவி மறைந்து கொள்கிறார்.
அடுத்ததாக விஜயா வர யாரோ திருடுவதற்கு நுழைந்துவிட்டது போல் கத்துகிறார் உடனே வீட்டில் உள்ளே அனைவரும் வந்து யார் திருட வந்தது என திட்டிக் கொண்டிருக்கிறார்கள் திருடுவது தப்பு உனக்கெல்லாம் அறிவே இல்லையா? இப்படி திருடுகிறாய் என அனைவரும் திட்ட முத்து திருடியை அளேக்காக தூக்கிக்கொண்டு வருகிறார் ஆனால் அது திருடி கிடையாது ரவி தான் ரவியை பார்த்து அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் இது என்னடா கோலம் என விஜயா திட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் நான் மூணு ஆம்பள சிங்கத்தை பெத்து இருக்கேன் இந்த மாதிரி பண்ணா எனக்கு சுத்தமா பிடிக்கல என ஸ்ருதியை திட்டுகிறார்.
மற்றொரு காட்சியில் ரவி நைட்டி போட்டுக் கொண்டிருப்பதை அனைவரும் கிண்டலடித்து போட்டோ எடுத்து கொண்டு இருக்கிறார்கள் அடுத்த நாள் காலையில் ஸ்ருதிக்கு ன்ன பிடிக்க அதை செய்து கொடு என விஜயா பேச அதற்கு முத்து கோபப்பட்டு யார் யாருக்கு என்ன பிடிக்கும் அதை செய்து கொடுப்பது தான் இவளுக்கு வேலையா இவளுக்கு வேற வேலை இல்லையா பூ கட்டுற வேலை இருக்கு என முத்து பேசுகிறார்.
அந்த சமயத்தில் அண்ணாமலையும் வருகிறார் உடனே ரோகினி இடம் உனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்து கொள்ளலாம் என கேட்க மீனாவை பழிவாங்குவதற்காக வெஜிடபிள் ரைஸ் என கூறுகிறார். அதற்குமே மீனா காய் அதிகமாக இல்லை அதை வாங்க வேண்டும் என கூறுகிறார் உடனே முத்து அதனால் என்ன வாங்கிவிட்டா போச்சு இங்க தான் வெட்டி ஆபிசர் ஒருத்தன் இருக்கான் இல்ல ஏன பேசுகிறார்.
உடனே அவனிடம் காசு கொடுத்து வாங்கிக் கொண்டு வர சொல்லலாம் என முத்து கூறுகிறார் அதற்கு நாலாம் போக முடியாது என மனோஜ் கூற நீதான் கடை வைக்க போற இல்ல அப்ப எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் நீயே போய் வாங்கி கொண்டு வா என முத்துவும் சொல்லுகிறார் அதற்கு அண்ணாமலையும் அதுதான் கரெக்ட். நீ தான் போய் வாங்கணும் நீயே போய் வாங்கிக்கொண்டு வா என கூறுகிறார்.
மனோஜ் காய்கறி வாங்குவதற்கு வெளியே செல்லும்பொழுது வெயில் ஓவராக அடிக்கிறது என காரில் சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வருகிறார் அப்பொழுது 490 காலியாகி விட்டது எனக் கூறுகிறார் அதற்கு இத்த காய் உனக்கு 490 என முத்து கேள்வி கேட்கிறார் உடனே அந்த கடைக்காரரிடம் நீ நல்லா ஏமாந்துட்ட என அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கடைக்காரர் வந்து தம்பி பிரின்டிங் மிஸ்டேக் அதற்காக தான் உன்னை அவ்வளவு தூரம் கூப்பிட்டேன் நீ பாட்டுக்கு வந்துட்ட இந்த மீதி பணம் வேண்டாமா என கொடுத்துவிட்டு செல்கிறார்.
இதனால் மனோஜை அனைவரும் கேவலமாக பார்க்கிறார்கள் இதை கூட உன்னால் சரியாக செய்ய முடியவில்லை நீ எப்படி பிசினஸை ஒழுங்காக பார்த்துக் கொள்வாய் என அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள். அடுத்த நாள் எபிசோடில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அண்ணாமலையின் அம்மா வருகிறார் இனிமேல் விஜயாவுக்கு சரியான பதிலடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதே போல் ரோகிணியும் இனிமேல் செமதியாக வாங்குவார் எனவும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.