siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் மாலை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த சமயத்தில் முத்து மற்றும் அண்ணாமலை இதுவரை எத்தனை மாலை முடிந்துள்ளது என கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அண்ணாமலை 350 மாலை முடிந்துள்ளதாக கூறுகிறார். இன்னும் 150 மாலை கட்ட வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது ஒரு சிலர் தூக்க சோடையில் இருப்பதால் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஸ்ருதி மீனாவுக்கு உங்களுக்கெல்லாம் கையே வலிக்கலையா என பேச மீனா எங்களுக்கு பழகி விட்டது நாளைக்கு தான் வலிக்கும் என பேசுகிறார். உடனே சுருதி நாளைக்கு வலிச்சா பரவாயில்ல அதான் ரோகிணி இருக்காங்க இல்ல அவங்கள மசாஜ் பண்ணிவிட சொல்லலாம் என பேசுகிறார். உடனே ரோகினி ஷாக் ஆகிறார்.
மினிஸ்டரை பார்த்ததும் தெறித்து ஓடும் கோபி.! ஜெனியை அழைத்து சென்ற செழியன்
அடுத்த காட்சியில் பார்வதியும் இடுப்பை வலிக்கிறது பூக்கட்டி முடிச்ச உடனே இடுப்பு புடிச்சு விடுறியா என கேட்க உடனே விஜயா அதற்கு என் மருமகள் தான் கிடைச்சாளா என கேள்வி கேட்கிறார். அனைவரும் தூக்கு கலக்கத்தில் இருப்பதால் ரெஸ்ட் எடுங்க என அண்ணாமலை கூற அதெல்லாம் வேண்டாம் ஐயா முடிச்சிடலாம் என பேசுகிறார்கள்.
உடனே தூக்கம் வராததற்கு பாட்டு பாடுங்கள் என கூற மீனா முதலில் பாடுகிறார். அடுத்தது முத்து பாட பிறகு பார்வதி பாடுகிறார். அடுத்தது ரவி பாட சுருதி இருவரும் இணைந்து டான்ஸ் ஆடுகிறார்கள். உடனே அண்ணாமலையும் பாட அடுத்ததாக விஜயா பாடுகிறார். இதனைப் பார்த்த பார்வதி கண் கலங்குகிறார். உடனே விஜயாவை கூப்பிட்டு உங்கள் குடும்பமே ஒன்னா சந்தோஷமா இருக்கிறதை பார்த்தால் எனக்கு அழுகையே வருகிறது.
எனக்கு இப்படி ஒரு கொடுப்பினை இல்லையே எனக் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் மாலை ஆர்டர் கொடுத்தவர் கால் செய்து மாலை ரெடியாகி விட்டதா என கேட்கிறார். அனைத்தும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது என முத்து பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி மாலை கட்டிக் கொண்டிருக்கும் பொழுது பெல் சவுண்ட் கேட்கிறது உடனே மனோஜை ரவி கூப்பிடுகிறார்.
உடனே கீழே சென்று குல்பி வாங்கி விட்டு வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் குல்ஃபியை அனைவருக்கும் கொடுத்துவிட்டு மீனாவுக்கு முத்து ஊட்டி விடுகிறார். இந்த நிலையில் மாலையை கட்டி முத்து அனுப்பி விடுகிறார். ஆனால் வண்டியுடன் 500 மாலையை தூக்கி விடுகிறார்கள். இதனால் முத்து செம டென்ஷன் ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.