ரோகினியை கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பிய விஜயா…! மொத்த உண்மையையும் போட்டு உடைத்த பிரவுன் மணி..

siragadikka aasai august 27
siragadikka aasai august 27

இன்றைய எபிசோடில் முத்து மற்றும் வேலாயுதம் பிரவுன் பணியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள் இவர் தான் அரோகினியின் மாமா என்று சொன்னார்களே ஆனால் இவர் ரோகினியின் மாமா கிடையாது கறிக்கடை பாய் இவர் கடையில் தான் சிக்கன் வாங்கி வந்து சமைத்தேன் அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என மீனா அனைவரிடமும் கேட்கிறார்.

உடனே முத்து இவரு இப்படி பொய் சொன்னதுக்கு காரணம் ரோகிணி தான் பொய்யின் மொத்த உருவம் ரோகிணி தான் வீட்ல உள்ள எல்லாரையும் ஏமாத்திருக்காங்க என முத்து கூறுகிறார் அப்பொழுது பிரவுன் மனிதம் முத்து இப்பவாவது உண்மைய சொல்றீங்களா எங்க குடும்பத்தையே ஏமாற்றி இருக்கீங்க என பேச அதற்கு பிரவுன் மணி பொய் என்னைக்குமே நிலைக்காது நான் அப்பவே சொன்னேனே ரோகினி நீ கேட்டியா என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் உங்கள் குடும்பத்தை ஏமாத்துனதுக்கு அப்புறம் என்ன மன்னிச்சிடுங்க ரோகிணி வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை அதனால என்கிட்ட ஹெல்ப் கேட்டாங்க நடிக்க சான்ஸ் வாங்கி தரேன்னு சொன்னாங்க அதனாலதான் நடிச்சேன் என கூறுகிறார். எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு பிரவுன் மணி வெளியே செல்கிறார் அப்பொழுது மனோஜ் இவன போலீஸ்ல புடிச்சு கொடுக்கணும் என கூற உன் பொண்டாட்டி தான் ஜெயிலுக்கு போகணும் ஏன்னா பொய்யின் மொத்த உருவமுமே உன் பொண்டாட்டி தான் என்ன பேசுகிறார்.

மற்றொரு காட்சியில்  மனோஜ் பார்த்து விஜயா எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீயும் உன் மனைவியும் தான் நீங்க ரெண்டு பேரும் எல்லாம் தெரிஞ்சு தான் பண்றீங்களா என்ன பேசுகிறார் சத்தியமா எனக்கு எதுவுமே தெரியாது அம்மா நானே என்ன நடக்குதுன்னு தெரியாம முழித்துக் கொண்டிருக்கிறேன் என கூறுகிறார். மேலும் இது யாரோ நீ பார்த்து கோபப்படுகிறார் அப்பொழுது அண்ணாமலை உன்னை ரொம்ப நம்பனும் நீ ஆனா இப்படி செய்வேன்னு நினைக்கவே இல்ல இவ்வளவு பொய் சொல்லி இருக்கியே என திட்டுகிறார் அண்ணாமலை.

அதேபோல் விஜயா ரோகினியை அரைத்து அடித்து உதைக்கிறார் அது மட்டும் இல்லாமல் நீ எதுக்கு இப்படி பொய் சொன்ன எனவும் கேட்கிறார் ஆனால் ரோகினி என்ன சொல்ல வருகிறார் என்று கேட்காமல் விஜயா ரோகினியை அடித்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.