சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை தன்னுடைய நண்பர் பரசுவிடம் சொல்லி இன்ஜினியரை அழைத்து வரச் சொல்லி உள்ளார் இன்ஜினியர் வந்ததும் அனைவரும் மேலே போகிறார்கள். அதற்கு முன்பு மீனா கிச்சனில் இருக்க ஸ்ருதி பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ரோகினி எதர்ச்சியாக வந்து பூ கட்டுவதில் நிறைய வருமானம் வருகிறதா என கேட்கிறார் ஏன் என்று மீனா கேட்க அதற்கு ரோகிணி இல்ல நீங்க வாண்டடா 2000 பணம் தருகிறேன் என்று சொன்னீர்களே அதை பத்தி கேட்டேன் என்று ரோகினி கூறுகிறார்.
பணம் தரேன்னு சொன்னா நிறைய பணம் சம்பாதிக்கிறேன் என்று அர்த்தமா என மீனா கேட்கிறார் அதுமட்டுமில்லாமல் மனோஜ் லெவலுக்கு இதைவிட அதிகமா பணம் தரலாம் அதுமட்டுமில்லாமல் மனோஜ் நிறைய சம்பாதிக்க போறார் ஆனா நீங்க கடைசி வரைக்கும் இப்படி பணம் தர முடியுமா பூ எப்ப பாத்தாலும் கட்ட முடியுமா எனக் கேட்க அதற்கு மீனா உங்களுக்கு எப்ப பாத்தாலும் பொருள் விக்கிமா ஒரு நாள் விக்காம தானே போகும் இன்று பதிலுக்கு பேசுகிறார்.
உடனே முத்து வருகிறார் முத்து காபி கேட்க அந்த மனோஜிடம் இனி பேசவே கூடாது எனக் கூறுகிறார். அதேபோல் ரோகிணி எத்தனை நாட்களாக பணம் கொடுக்க முடியும் என்பது போல் கூறியதை முத்து விடம் மீனா கூறி் கொண்டிருக்கிறார். மற்றொரு காட்சியில் அண்ணாமலை தன்னுடைய நண்பர் உதவியுடன் வீட்டை அளந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது அனைவரும் மொட்டை மாடிக்கு செல்ல எதற்காக என கேட்கிறார்கள் ரூம் கட்டுவதற்கு என ரவி கூறுகிறார்.
உடனே எவ்வளவு ஆகும் என கேட்க 5 லட்சம் ஆகும் என இன்ஜினியர் கூறுகிறார் முன்ன பின்ன ஆகும் பார்த்து பேசிக்கொள்ளலாம் எனவும் கூறுகிறார்கள். கீழே வந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது எப்படி ஐந்து லட்சத்தை ரெடி பண்ண முடியும் என கேட்கிறார்கள் அதான் நீங்க எல்லாரும் காசு தரேன்னு சொல்லி இருக்கீங்களே அதை வைத்து நாம் கட்டிவிடலாம் என கூற 5 லட்சம் சேர்ப்பதற்கு இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிடும் எனவும் கூறுகிறார்கள்.
அதற்கு அண்ணாமலை வீட்டு பத்திரத்தை அடகு வைத்து நாம் கட்டிவிடலாம் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கட்டி கடனை அடைத்து விடலாம் என கூறுகிறார்கள் அதற்கு விஜயா என் வீட்டு பத்திரம் என் அப்பா எனக்காக கொடுத்தது அதை நான் கொடுக்க மாட்டேன் என கூறுகிறார் இந்த மீனாவுக்கும் ரூம் கட்டுவதற்கு நான் என் வீட்டு பத்திரத்தை கொடுக்கணுமா எனவும் கேட்கிறார். பங்களாவுல தான் வாழ்வாளா இவளுக்கு சும்மா குடிசை போட்டு தாங்க அதெல்லாம் வாழ்வா என பேசுகிறார் அதற்கு மீனா என் புருஷனோட குடிசைல இருந்தாலும் நான் சந்தோஷமா தான் இருப்பேன் என பேசுகிறார்.
இப்படி மாறி மாறி பேச அமைதியாக இருக்க சொல்கிறார் அண்ணாமலை. அப்பொழுது விஜயா நீங்க ட்ரெயின் ஓட்ட தெரியாம அவங்க அப்பா மேல இடிச்சதுக்கு அவளை கட்டி வச்சுட்டீங்க இப்ப குடும்பமே இப்படி இருக்கு என பேச கோபப்படுகிறார் அவ்வளவு தான் உனக்கு மரியாதை என்பது போல் பேசுகிறார் இதனால் விஜயா முகம் மாறுகிறது. மேலும் முத்து அண்ணாமலையிடம் வீடு எல்லாம் வேணாம் பா நாங்க மாடியிலயும் ஹால்லையும் படுத்துகிறோம் என பேசுகிறார் அதற்கு அண்ணாமலை வேலைக்கு போகணும்னு சொல்லல வேலைக்கு போ என மிரட்டுகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.