சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதற்காக ரவி சுருதியை தூக்கிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது முத்து மீனாவை தூக்கிக்கொண்டு ஹாலில் சுற்றி வருகிறார் இப்படி ஆளாளுக்கு காதலை வெளிப்படுத்த ரோகிணியும் மனோஜை தூக்க சொல்கிறார் இப்படி அனைவரும் தூக்கிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் அண்ணாமலை வர பார்த்தும் பார்க்காதபோல் நிற்கிறார் ஆனால் விஜயா அவர்களை பார்த்துவிட்டு நிறுத்துங்கள் இது என்ன வீடா இல்ல வேற ஏதாவதா நினைத்தீர்களா ரூம்ல இருக்க வேண்டியது இப்படி பப்ளிக்கா செய்றீங்களே என திட்ட எல்லாத்துக்கும் மீனாதான் காரணம் எனக் கூற உடனே சுருதி அவங்கள ஏன் திட்றீங்க நான் தான் தூக்கிக்கிட்டு சுத்த சொன்னேன் என சுருதி பேசுகிறார்.
இப்படி ஆளாளுக்கு பேச இடைப்பட்ட நேரத்தில் ரூம் பிரச்சனை வர என்னால் இனிமேல் ரூமை விட்டு வெளியே போக முடியாது என மனோஜ் கூறுகிறார் இதற்கு ஒரு முடிவு செய்கிறேன் என அண்ணாமலை முடிவு செய்கிறார். இப்படியே போக அடுத்த நாள் அண்ணாமலை அனைவரையும் அழைக்க அனைவரும் இருக்கிறார்கள் இப்பொழுது நீங்கள் வீட்டிற்கு காசு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இனிமேல் யார் யார் எவ்வளவு தரப்போகிறீர்கள் என கூறுங்கள் என பேசுகிறார்.
அப்பொழுது முதல் ஆளாக மனோஜ் இடம் இருந்து ஆரம்பிக்கிறார்கள் மனோஜ் வீட்டுக்கு எதுக்கு காசு தரணும் என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே தான் கொடுத்துக்கிட்டு இருக்கமே எனவும் கூறுகிறார் உடனே மனோஜ் 2000 எனக் கூற வேறு 2000 உன்னை படிக்க வைத்த பொழுது அப்பா உனக்கு கணக்கு பார்த்தாரா என கேள்வி எழுப்புகிறார் முத்து.
ஒரு வழியாக மனோஜ் 8000 எனக் கூற அடுத்ததாக முத்துவிடம் கேட்க முத்து பத்தாயிரம் என கூறுகிறார் அதே போல் ரவியும் பத்தாயிரம் எனக் கூற மீனா என் பங்குக்கு நானும் காசு தருகிறேன் என கூறுகிறார் அதற்கு விஜயா அவமானப்படுத்துகிறார் இலட்சக்கணக்கில் தூக்கி கொடுக்கப் போகிறாய் என பேசுகிறார் விஜயா உடனே மீனா நானும் 2000 பணம் தருகிறேன் எனக் கூற அடுத்ததாக ரோகிணியும் பணம் தருகிறேன் என ஐந்தாயிரம் தருகிறேன் என கூறுகிறார்.
அதே போல் சுருதியும் பணம் தருகிறேன் என 3000 என கூற இது எல்லாத்தையும் என்கிட்ட கொடுத்துடுங்க என விஜயா கூற யாருகிட்டயும் கொடுக்க கூடாது பணம் எல்லாமே எனக்கு வரணும் என அண்ணாமலை கூறுகிறார் இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்ன பண்ண போறீங்க என மனோஜ் கேட்க அது எல்லாம் எனக்கு தெரியும் நீ பணத்தை ரெடி பண்ணுங்க 5 ஆம் தேதி குள்ள கொடுங்க என கூறி விடுகிறார்.
மொட்டை மாடியில் நின்று கொண்டு ரவி மனோஜ் முத்து என அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ரவி இந்த ரூம் பிரச்சனைக்கு பேசாம இத வித்துட்டு வேற ஒரு அபார்ட்மெண்டுக்கு தான் போக வேண்டும் என கூறுகிறார் உடனே மனோஜ் எனக்கு கீழ் ப்ளோர் என கூற அப்பா எல்லாருடன் சந்தோஷமா ஒத்துமையா இருக்கணும்னு நினைக்கிறாரு அதுக்காக தான் இவ்வளவு கஷ்டப்படுறாரு ஆனா அவர் மனசு நீங்க புரிஞ்சுக்காம அவர் தனியா தள்ளிவிட பாக்குறீங்களே நான் இருக்கிற வரைக்கும் அவரை தனியா விடமாட்டேன் எனமுத்து கூறுகிறார்.
இப்படி ஆளாளுக்கு பேச மனோஜ் ஏதோ பேச அதற்கு முத்து அவரை அடிக்க பார்க்கிறார் இனிமேல் மொட்டை மாடிக்கு நான் வரமாட்டேன் என கூறிவிட்டு கீழே செல்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.